HolyIndia.Org
Holy India Org Add New Temple

கட்ரா


இறைவன்வைஷ்ணவிதேவி, (சிரோ பாலி)
தீர்த்தம்கங்கா நதி
கிராமம்/நகரம்கட்ரா
மாவட்டம் கட்ரா
மாநிலம் ஜம்மு & காஷ்மீர்

வரலாறு : தட்சன் யாகம் செய்யும்பொழுது சிவபெருமானை அழைக்காமல் அவமானம் செய்தான். ஆனால் பராசக்தி யாகத்திற்கு சென்றாள். அன்னையையும் தட்சன் அவமதித்ததால் சக்தி கோபத்தில் யாககுண்டத்தில் விழுந்து இறந்துபோனாள்.

அப்போது சிவபெருமான் மகாசக்தியின் உடலை கையில் ஏந்தி ருத்ரதாண்டவம் ஆடினார். அப்போது கிருஷ்ணன் சிவனின் கோபத்தை தணிக்க சக்தியின் உடல் மீது தனது சக்ராயுதத்தை எறிந்தார். அது உடலை துண்டு துண்டாக்கியது. அவ்வாறு விழுந்த ஒவ்வொரு துண்டும் ஒவ்வொரு சக்திபீடமாகியது. அதில் ஒன்றே ஜம்மு வைஷ்ணவிதேவி கோயிலாகும்.


திருவிழா : நவராத்திரி.
சிறப்பு : இந்தியாவின் வட எல்லையில் உள்ள அம்மன் தலம் இது. அம்மனின் சக்தி பீடங்களில் முக்கியமானது. இங்கு அம்மன் அரூபமாக (சிலை வடிவில் இல்லாமல்) அருள்பாலிக்கிறாள்.( துர்கை, லட்சுமி, சரஸ்வதி மூவரும் ஒரே மூலஸ்தானத்தில் அருள்பாலிக்கின்றனர்.)
திறக்கும் நேரம் : கோயில் வருடமும் முழுவதும் 24 மணி நேரமும் திறந்திருக்கும்.
பொது தகவல் : சற்று ஓய்வெடுக்க விரும்புபவர்கள் இங்குள்ள தர்மசாலாவில் தங்கலாம். குளிரை விரட்ட கம்பளிகளும் கூட கிடைக்கும்.

அர்த் குமாரியில் இருந்து நடந்தால் மாதா வைஷ்ணவி தேவியின் கோயில் அமைந்துள்ள தர்பாருக்கு முக்கால் கிலோ மீட்டருக்கு முன் பஜார் உள்ளது.

இங்கு தான் மாதாவை பூஜிக்க புஷ்பங்களையும், நிவேதனங்களை யும் வாங்கிக் கொள்ள வேண்டும். கோயிலுக்குச் சென்றவுடன் அங்குள்ள க்ளாக் ரூமில் நாம் கொண்டு செல்லும் பொருட்களை வைக்க வேண்டும். ராணுவ பாதுகாப்புக் கருதி இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆண், பெண்களுக்கு என்று தனித் தனியாக உள்ள ஸ்நான கட்டங்களில் குளித்த பின்னர் யாத்ரா-பர்ச் என்ற யாத்திரை சீட்டை அலுவலகத்தில் கொடுத்து நம்பர் வாங்கி, பின்னர் மாதா தேவியை தரிசிக்க க்யூவில் நிற்க வேண்டும். அவ்வாறு வரிசையில் நிற்கும் முன் நம்முடைய உடைமைகள் அனைத்துமே ராணுவத்தினரால் செக் செய்யப்படும், தீப்பெட்டி முதல் தேவையில்லாத பொருட்கள் அனைத் துமே எடுத்து ஒரு பெட்டியில் போட்டு விடுவார்கள். நாம் தேவியை தரிசித்து விட்டு திரும்பும் போது தேடி எடுத்துக்கொள்ளலாம். நம்முடைய பொருட்கள் எதுவும் திருடு போகாது. போட்டது போட்டபடியே கிடக்கும்.

அதே போல், க்யூவில் நின்றுசிறிது தூரம் சென்ற பின் நம்முடைய பூஜைபொருட்களை வாங்கி கொண்டு ஒரு டோக்கன் கொடுப்பார்கள். அந்த டோக்கனை பெற்றுக்கொண்டு தரிசனம் முடிந்து திரும்பும் போது டோக்கனை திருப்பி கொடுத்து பூஜை செய்த பொருட்களை வாங்கி கொள்ள லாம்.

நடந்து செல்பவர்கள் களைப்பை போக்க ஒரு கி. மீட்டருக்கு ஒரு "ரெப்பிரஸ் மென்ட்' ஷாப்பிங் உண்டு. அங்கு காபி, ஜூஸ் முதல் அனைத்தும் கிடைக்கும். அதே போல், இரண்டு கிலோமீட்டருக்கு ஒரு மெடிக்கல் சென்டர் இருக்கும், ஏறி வருபவர்க ளுக்கு உடல் நிலை பாதித்தால் இலவசமாக முதலுதவி செய்யப்படும்.


பிரார்த்தனை : இங்குள்ள அம்மனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நிறைவேறும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.


நேர்த்திக்கடன் : பக்தர்கள் தங்களால் இயன்ற காணிக்கையை செலுத்துகின்றனர்.
தல சிறப்பு : கட்ராவில் இருந்து மாதா கோவில் தர்பாருக்குச் செல்ல 14 கி.மீ., நடந்து செல்ல வேண்டும். இந்த 14 கி.மீ., தூர நடை பயணத்தில், மனம் லேசாவது டன் இனம் புரியாத குதூகலமும் ஏற்படும்!

கட்ராவில் இறங்கி பஸ் ஸ்டாண்டில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி அறக்கட்டளை அலுவலகத்தில் "யாத்ரி பர்ச்' என்ற அனுமதிச் சீட்டை நம் முழு முகவரியைக் கொடுத்து பெற்றுக் கொண்டு நடை பயணத்தைத் தொடர வேண்டும்.

நடக்கத் துவங்கிய சில நிமிடங்களி லேயே திரி கூட பர்வதத்தின் (கோயிலுக்குச் செல்லும் முதல் பாதை) அடிவாரத்தை அடைந்து விடலாம். அடிவாரத்தின் அருகில் 24 மணி நேரமும் இலவச உணவு பக்தர்களுக்கு வழங்கப்படும்.

மலைப்பாதையில் அரை கீ.மி., தூர பயணத்தில் ராணுவ செக்போஸ்ட் உள்ளது. இங்கு யாத்ரீ-பர்ச்சை கொடுத்து, ராணுவ முத்திரை பெற்று பயணத்தை தொடர வேண்டும். ராணுவ செக்போஸ்ட்டில் முழு செக்கப் இருக்கும். இங்கிருந்து வைஷ்ணவி தேவியின் கோயில் உள்ள தர்பாருக்குச் செல்ல இரண்டு பாதைகள் உள்ளன. படிகள் உள்ள பாதையும், நம்மூர் பழனியில் உள்ள யானைப் பாதை போன்ற சறுக்கு பாதையும் உண்டு. சறுக்குப் பாதையும், படிக ளும் தனித் தனியாக உள்ளன. இதில் நமக்கு வசதியான பாதையை தேர்ந் தெடுத்து பயணத்தைத் தொடரலாம்.

கோயில் வருடம் முழுவதும் 24 மணி நேரமும் திறந்திருக்கும். இருபுறமும் பசுமைக் காடுகளுக்கு மத்தியில் 24 மணி நேரமும் "ஜெய் மாதா தி' கோஷத்துடன் பல்வேறு இன, மாநில மக்கள் நடந்து செல் வதைக் காண்பதே கண்கொள்ளாக் காட்சிதான். 7 வயது முதல் 70 வயது வரையிலானவர்கள் வைஷ்ணவ தேவியின் தரிசனம் ஒன்றே குறிக்கோளாக பரவசமாக செல்வர்.

நடை பயணத்தில் நாம் பவித்ர கங்கா நதியை கடக்க வேண்டும். தன்னை நாடி வரும் பக்தர்களைப் புனிதப்படுத்த வேண்டும் என்பதற்காக தேவியே அம்பெய்து நதியை உற்பத்தி செய்ததாக ஒரு செவி வழி புராணச் செய்தி உண்டு.

வழியில் சரண்பாதுகா என்ற இடம் உள்ளது. இங்கு மாதா தேவி பக்தர் களை பின் தொடர்ந்து அரக்கன் வரு கின்றானா என்று கண்காணித்து பாது காவல் செய்வதாக ஐதீகம் உள்ளது.

அடுத்து வருவது அர்த் குமாரி. இங்கு நாம் செல்லும் பாதையில் ஒரு குகை இருக்கிறது. குகைக்குள் நுழைந்து அங்குள்ள தேவ கன்னிகை விக்ரகத்தை தரிசித்து பின்னர், பயணத்தை தொடர வேண்டும்.

அர்த் குமாரியில் இருந்து நடந்தால் மாதா வைஷ்ணவி தேவியின் கோயில் அமைந்துள்ள தர்பாருக்கு முக்கால் கிலோ மீட்டருக்கு முன் பஜார் உள்ளது.

இங்கு தான் மாதாவை பூஜிக்க புஷ்பங்களையும், நிவேதனங்களை யும் வாங்கிக் கொள்ள வேண்டும்.

தேவியை தரிசிக்கும் போது, அங்குள்ள பூஜாரி பக்தர்களுக்கு நாணயங்களை பிரசாதமாக வழங்கு வார். அதை பத்திரமாக நம்முடைய வீட்டில் உள்ள பூஜை அறையில் வைத்தால், தேவியே நம்முடன் இருக்கின்ற தைரியம் ஏற்படும்.

க்யூவில் நகர்ந்து செல்லும் போது 2.5 அடி உயரம், 2.5 அடி அலகம் கொண்ட சிறிய குகை போன்ற துவாரம் உள்ளது. அதில் படுத்த படி ஒவ்வொருவரும் ஊர்ந்து 38 அடி தூரம் சென்றால் மீண்டும் திறந்த வெளி வரும்.

சிறிது தூரத்தில் மீண்டும் ஒரு குகை வருகிறது. இது சற்று விஸ்தாரமானதாக இருக்கும். இங்கு தான் மாதா வைஷ்ணவி தேவியின் பிண்டிகள் எனப்படும், சிலா விக்ரகங்கள் உள்ளன.

மஹா காளி, மஹாலட்சுமி, மஹா சரஸ்வதி என்று மூன்று வடிவங்களில் மாதா அருள் பாலிக்கிறார்.

அங்குள்ள அகண்ட ஜோதி எப்போதும் சுடர்விட்டு பிரகாசித்துக் கொண்டிருக்கும். மாதா தேவிக்கு காலை, மாலை என்ற இரு வேளை பூஜை உண்டு.

மாதா தேவியின் கோயில் அடர் காடுகளுக்கு நடுவில் கடல் மட்டத்திலி ருந்து 7 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளதால் கோடை காலத்தில் சென்று வரலாம்.


பாடியவர்கள் : -
முகவரி : அருள்மிகு வைஷ்ணவி தேவி கோயில், கட்ரா-182 301. ஜம்மு காஷ்மீர்.