HolyIndia.Org
Holy India Org Add New Temple

உசிலம்பட்டி புத்தூர்


இறைவன்சுப்பிரமணிய சுவாமி
புராண பெயர்குமார கோயில்
கிராமம்/நகரம்புத்தூர், உசிலம்பட்டி
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

திருவிழா : தைப்பூசம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம்.
சிறப்பு : மூலவர் சுப்பிரமணியர் இடுப்பில் கத்தி, பாதத்தில் காலணி, காலில் போர் வீரர்கள் அணியும் தண்டை அணிந்திருக்கிறார். இத்தகைய கோலத்தில் முருகனைத் தரிசிப்பது அபூர்வம். இக்கோயிலில் தாணுமாலய லிங்கம் இருக்கிறது. ஆவுடையார் (பீடம்) இல்லாமல் பாணம் மட்டுமே இருக்கும் இந்த லிங்கத்திற்குள், சிவன், திருமால், பிரம்மா ஆகிய மூவருமே ஐக்கியமாகியிருப்பதாக ஐதீகம்.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
பாடியவர்கள் : -
முகவரி : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், உசிலம்பட்டி - 624706 மதுரை மாவட்டம்