HolyIndia.Org
Holy India Org Add New Temple

இடைக்காட்டூர்


இறைவன்ஆழிகண்டீஸ்வரர் (மணிகண்டீஸ்வரர்)
இறைவிசவுந்தர்யநாயகி
தல மரம்வில்வம்
தீர்த்தம்வைகை
கிராமம்/நகரம்இடைக்காட்டூர்
மாவட்டம் சிவகங்கை
மாநிலம் தமிழ்நாடு

திருவிழா : பங்குனி உத்திரம், சிவராத்திரி
சிறப்பு : பொதுவாக சிவன் கோயில் பிரகாரத்தில் ஈசான திசையில் (வடகிழக்கு) நவக்கிரக சன்னதி அமைந்திருக்கும். ஆனால், இங்கு ஊரின் எல்லையில் ஈசான்ய திசையில், தனிக்கோயிலில் நவக்கிரகங்கள் உள்ளன. இங்கு இடைக்காடர் தவக்கோலத்தில் இருக்கிறார்.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 8 மணி வரை, மாலை மணி 6 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : பங்குனி உத்திரத்தில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. அப்போது பக்தர்கள் முருகனுக்கு காவடி எடுப்பதுடன், பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றுவது விசேஷம்.

கிருத்திகை நட்சத்திரத்தின்போது முருகன் வள்ளி, தெய்வானையுடன் மயில் வாகனத்தில் புறப்பாடாகிறார். தமிழ் மாதப்பிறப்பின்போது இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது.

பொதுவாக விநாயகர் சன்னதி எதிரே மூஞ்சூறுதான் இருக்கும். ஆனால், இக்கோயிலில் விநாயகருக்கு எதிரே யானை இருக்கிறது. இந்த அமைப்பு மிக விசேஷமானது.



பாடியவர்கள் : -
முகவரி : அருள்மிகு ஆழிகண்டீஸ்வரர் திருக்கோயில், இடைக்காட்டூர்- 630602. சிவகங்கை மாவட்டம்.