HolyIndia.Org
Holy India Org Add New Temple

இடிகரை


இறைவன்வில்லீஸ்வரர், வில்லீஸ்வர பரமுடையார்
இறைவிவேதநாயகி
தல மரம்வில்வம்
தீர்த்தம்கிணற்று நீர் தீர்த்தம்
புராண பெயர்இருகரை
கிராமம்/நகரம்இடிகரை
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

திருவிழா : சித்திரைப்பிறப்பு,ஆடி வெள்ளி, தை வெள்ளி, கந்தசஷ்டி, ஆருத்ராதரிசனம், மகாசிவராத்திரி, பங்குனியில் சோமவாரம், திருவாதிரை, குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, திருக்கார்த்திகை தீபம், மகாசிவராத்திரி ஆகிய நாட்களில் திருவிழா கொண்டாடப்படுகிறது.
சிறப்பு : இங்குள்ள மூலவர் மண்ணில் கிடைத்தவராக நெற்றியில் மூன்று நேர்கோடுகளுடன் காட்சிதருகிறார். அவருக்கு நேரே ஆவணியில் 14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள் சூரியன் தனது கிரணங்களைப் பரப்பி பூஜை செய்கிறார். இங்குள்ள நவக்கிரகங்கள் தரையில் இருந்து ஒரு அடி உயரத்தில் அமைந்துள்ளது சிறப்பாக உள்ளது. இங்கு காகிதத்தில் குறைகளை எழுதி வைக்க அக்குறை முப்பது நாட்களில் குணமாகும் அதிசயம் நடப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். மிகவும் புராதனமான இங்கு, இதுவரையிலும் அதிகளவில் கல்வெட்டுக்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
திறக்கும் நேரம் : காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் 7.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
பாடியவர்கள் : -
முகவரி : அருள்மிகு ஸ்ரீவில்லீஸ்வரர் திருக்கோயில், இடிகரை, கோயம்புத்தூர் மாவட்டம்.