HolyIndia.Org
Holy India Org Add New Temple

ஆண்டார்குப்பம்


இறைவன்பால சுப்பிரமணியர்
இறைவிவிசாலாட்சி
தீர்த்தம்வேலாயுத தீர்த்தம்
கிராமம்/நகரம்ஆண்டார்குப்பம்
மாவட்டம் திருவள்ளூர்
மாநிலம் தமிழ்நாடு

திருவிழா : சித்திரையில் பிரம்மோற்ஸவம், வைகாசி விசாகம், ஆடிகிருத்திகை, கார்த்திகையில் குமார சஷ்டி, கந்தசஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம்.
சிறப்பு : இங்குள்ள அதிகார முருகன், காலையில் குழந்தையாகவும், உச்சி வேளையில் இளைஞர், மாலையில் முதியவர் போலவும் தோற்றமளிப்பது வித்தியாசமான தரிசனம்.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : இத்தலத்தின் சிறப்பு இங்குள்ள அதிகார முருகன். இங்குள்ள விமானம் ஏகதளம். இங்குள்ள விநாயகர் வரசித்தி விநாயகர். முன் மண்டபத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, நடராஜருக்கு சன்னதிகள் இருக்கிறது.
பிரார்த்தனை : பொறுப்பான பதவி கிடைக்க, அதிகாரமுள்ள பதவியில் இருப்போர் பணி சிறக்க, புத்திசாலித்தனமான குழந்தைகள் பிறக்கவும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன் : முருகனுக்கு பாலபிஷேகம் செய்தும், சந்தனக்காப்பிட்டும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.
பாடியவர்கள் : அருணகிரியார்
முகவரி : அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், ஆண்டார்குப்பம் - 601 204. திருவள்ளூர் மாவட்டம்.