HolyIndia.Org
Holy India Org Add New Temple

அஹோபிலம்


இறைவன்மலை அடிவாரக்கோயில்: பிரகலாத வரதன், லட்சுமி நரசிம்மன். மலைக்கோயில்:அஹோபில நரசிம்மர்
இறைவிமலை அடிவாரக்கோயில்: அமிர்தவல்லி, செஞ்சுலட்சுமி. மலைக்கோயில்: லட்சுமி
தீர்த்தம்மலை அடிவாரக்கோயில்: இந்திர தீர்த்தம், நரசிம்ம தீர்த்தம், பாபநாச தீர்த்தம், கஜதீர்த்தம், பார்க்கவ தீர்த்தம். மலைக்கோயில்:பாவநாசினி
புராண பெயர்திருச்சிங்கவேள் குன்றம்
கிராமம்/நகரம்அஹோபிலம்
மாவட்டம் கர்நூல்
மாநிலம் ஆந்தர பிரதேஷம்

திருவிழா : நரசிம்மர் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி,
சிறப்பு : மலைக்கோயிலில் பிரகலாதனுக்காக நரசிம்மர் வெளிப்பட்ட "உக்கிர ஸ்தம்பம்' (தூண்) உள்ளது.
திறக்கும் நேரம் : மலை அடிவாரக்கோயில்: காலை 6.30 மணி முதல் மதியம் 1 மணி வரை, மதியம் 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். மலைக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை, மதியம் 3 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும்
பொது தகவல் : இங்கு மலை அடிவாரத்தில் ஒரு கோயிலும், மலை மேல் ஒரு கோயிலும் உள்ளன. அடிவாரத்திலிருந்து மலைமேல் உள்ள கோயிலுக்கு 10 கி.மீ. தூரம் உள்ளது. மலைமீதுள்ள நரசிம்ம தலங்களை தகுந்த பாதுகாப்புடன் சென்றால் தான் தரிசிக்க முடியும். மாலை நேரத்தில் மிருகங்களின் நடமாட்டம் இருக்கிறது. கரடுமுரடான பாதைகளுடன், செங்குத்தான மலைமீதும் ஏற வேண்டும். மாலை 6 மணிக்குள் மலைக்கோயில் தரிசனத்தை முடித்து இறங்கி விட வேண்டும். 

மலை அடிவாரக்கோயிலில் உள்ள மூலவர் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்குள்ள விமானம் குகை விமானம்.


பிரார்த்தனை : எதிரிகளால் ஏற்படும் தொல்லைகளில் இருந்து விட பிரார்த்தனை செய்யலாம்.
நேர்த்திக்கடன் : நரசிம்மருக்கு அபிஷேகம் செய்து துளசியால் அர்ச்சனை செய்யப்படுகிறது.
பாடியவர்கள் : திருமங்கையாழ்வார் மங்களாசாசனம்

 மென்ற பேழ்வாய் வாளெயிற்றோர் கோளரியாய் அவுணன் பொன்ற ஆகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம் நின்ற பசுந்தீ மொன்டு சூறை நீள் விசும் பூடிரிய சென்று காண்டற் கரிய கோயில் சிங்க வேள் குன்றமே.

 -திருமங்கையாழ்வார்


முகவரி : அருள்மிகு பிரகலாத வரதன் (லட்சுமி நரசிம்மன்) திருக்கோயில், அஹோபிலம்- 518 545 கர்நூல் மாவட்டம் ஆந்திர மாநிலம்