HolyIndia.Org
Holy India Org Add New Temple

அரியக்குடி


இறைவன்திருவேங்கடமுடையான்
இறைவிஸ்ரீதேவி, பூதேவி
கிராமம்/நகரம்அரியக்குடி
மாவட்டம் சிவகங்கை
மாநிலம் தமிழ்நாடு

திருவிழா : சித்திரை மாதப் பிறப்பன்று திருமஞ்சனம், சித்ரா பவுர்ணமியன்று சுவாமி வீதியுலா, வைகாசியில் பிரமோற்ஸவம், ஆடிப்பூர உற்சவம், கோகுலாஷ்டமி, புரட்டாசி சனி, வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரத்தில் சுவாமிக்கும் தாயாருக்கும் திருக்கல்யாணம் உள்ளிட்ட பல விழாக்கள் நடக்கின்றன.
சிறப்பு : இங்கு பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் உள்ள கருடாழ்வார் இருபுறமும் சிம்மங்களுடன் காட்சி தருவது அதிசயமாக உள்ளது.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 4 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : இங்கிருந்து 15 கி.மீ., தூரத்தில் பிள்ளையார்பட்டி தலம் உள்ளது.
பிரார்த்தனை : திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
நேர்த்திக்கடன் : பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
பாடியவர்கள் : -
முகவரி : அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில் , அரியக்குடி-630 302, காரைக்குடி தாலுகா, சிவகங்கை மாவட்டம்.