HolyIndia.Org
Holy India Org Add New Temple

அண்ணாமலைநகர்


பாசுபதநாதர் உடனுறை நல்லநாயகி, சற்குனாம்பாள் திருக்கோயில் திருவேட்களம் என்ற இடத்தில் அமைந்துள்ளது .

திருவேட்களம் கோயில் திருநாவுக்கரசர் - 1,திருஞானசம்பந்தர் - 1 பாடல் பெற்றது.

வழி: சிதம்பரத்தில் இருந்து 2 கி.மி. தொலைவில் அண்ணாமலை பல்கலைக் கழகம் வளாகத்தின் உள்ளே பின்புறம் சங்கீதக் கல்லூரியைக் கடந்து சென்று இத்தலத்தை அடையலாம்.

கோயில் பற்றி: திருஞானசம்பந்தர் சிதம்பரத்தில் தங்கியிருப்பதற்கு மனமில்லாமல் திருவேட்களம் என்ற இத்தலத்திலிருந்து கொண்டு தான் சிதம்பரத்திற்கு எழுந்தருளி நடராஜப் பெருமானை தரிசித்து வந்தார். அர்ஜுனன் இத்தலத்தில் தான் இறைவன் பாசுபதநாதரிடம் இருந்து பாசுபதாஸ்திரம் பெற்றான். பாசுபதாஸ்திரம் கையில் ஏந்திய இறைவனின் உற்சவ விக்கிரகமும், அர்ஜுனன் உற்சவ விக்கிரகமும் இவ்வாலயத்தில் உள்ளன. வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் அளித்த உற்சவம் நடைபெறுகிறது. நாரதர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளார்.