HolyIndia.Org
Holy India Org Add New Temple
கோயில் : 0275-திருவிடைவாய்
சிவஸ்தலம் பெயர் : திருவிடைவாய்
இறைவன் பெயர் : விடைவாயப்பர், புண்ணியகோட்டீஸ்வரர்
இறைவி பெயர் : உமையம்மை, அபிராமி.
எப்படிப் போவது : தஞ்சாவூர் மாவட்டம், கொரடாச்சேரி - கூத்தாநல்லூர் பாதையில் வெண்ணாற்றுப் பாலத்திற்கு அருகில் பிரியும் "திருவிடைவாயில்" என்னும் வழிகாட்டிப் பாதையில் 2 கி. மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். தற்போது திருவிடைவாயில் என்று வழங்குகிறது.
சிவஸ்தலம் பெயர் : திருவிடைவாய்
மற்றவை தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி
உங்களிடமிருந்துதேவை இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும்
-தேவாரப் பதிகம் :-தல மரம் :-தீர்த்தம் :- வழிபட்டோர்:-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் :
விவரம் அளிக்க இங்கே தட்டவும்
ஆலயம் பற்றி :
தல வரலாறு சோழநாட்டு காவிரி தென்கரையில் இது 114வது தலமாகும். இத்தலம் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டத் திருமுறைத் தலமாகும். கி. பி. 1917ல் இத்தலம் கண்டெடுக்கப்பட்டது. மேடு ஒன்றினை வெட்டியெடுக்கும்போது உள்ளே கோயில் இருந்ததாகவும், தோண்டிப் பார்க்கையில் கோயிலுக்குள் அத்தலத்தைப் பற்றிய திருஞானசம்பந்தர் தேவாரம் கல்வெட்டில் இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. சிறப்புக்கள் ஐயடிகள் காடவர்கோன் தம்முடைய க்ஷேத்திரக் கோவையில் "தென் இடைவாய்" என்று குறிப்பிட்டுப்பாடுகிறார். கோயிலில் தலப்பதிக கல்வெட்டு உள்ளது. ...திருசிற்றம்பலம்...
குறிப்பு

Add more details about this temple
Add more photos


More details about this temple given by user:
திருச்சிற்றம்பலம்

மறியார் கரத்தெந்தையம் மாதுமை யோடும் பிறியாத பெம்மான் உறையும் இடமென்பர் பொறிவாய் வரிவண்டுதன் பூம்பெடை புல்கி வெறியார் மலரில் துயிலும் விடைவாயே.

ஒவ்வாத என்பே இழையா ஒளிமௌலிச் செவ்வான்மதி வைத்தவர் சேர்விட மென்பர் எவ்வாயிலும் ஏடலர் கோடலம் போது வெவ்வாய் அரவம் மலரும் விடைவாயே.

கரையார்கடல் நஞ்சமு துண்டவர் கங்கைத் திரையார்சடைத் தீவண்ணர் சேர்விட மென்பர் குரையார்மணி யுங்குளிர் சந்தமுங் கொண்டு விரையார் புனல்வந் திழியும் விடைவாயே.

கூசத் தழல்போல் விழியா வருகூற்றைப் பாசத் தொடும்வீழ உதைத்தவர் பற்றாம் வாசக் கதிர்ச்சாலி வெண்சா மரையேபோல் வீசக் களியன்னம் மல்கும் விடைவாயே.

திரிபுரம் மூன்றையுஞ் செந்தழல் உண்ண எரியம்பு எய்தகுன்ற வில்லிஇட மென்பர் கிரியுந் தருமாளிகைச் சூளிகை தன்மேல் விரியுங் கொடிவான் விளிசெய் விடைவாயே.

கிள்ளை மொழியாளை இகழ்ந்தவன் முத்தீத் தள்ளித் தலைதக்கனைக் கொண்டவர் சார்வாம் வள்ளி மருங்குல் நெருங்கும் முலைச்செவ்வாய் வெள்ளைந் நகையார் நடஞ்செய் விடைவாயே.

பாதத் தொலி பாரிடம் பாடநடஞ்செய் நாதத் தொலியர் நவிலும் இடமென்பர் கீதத் தொலியுங் கெழுமும் முழவோடு வேதத் தொலியும் பயிலும் விடைவாயே.

எண்ணாத அரக்கன் உரத்தை நெரித்துப் பண்ணார் தருபாடல் உகந்தவர் பற்றாம் கண்ணார் விழவிற் கடிவீதிகள் தோறும் விண்ணோர் களும்வந் திறைஞ்சும் விடைவாயே.

புள்வாய் பிளந்தான் அயன்பூ முடிபாதம் ஒள்வான் நிலந்தேடும் ஒருவர்க் கிடமாந் தெள்வார் புனற்செங் கழுநீர் முகைதன்னில் விள்வாய் நறவுண்டு வண்டார் விடைவாயே.

உடையேது மிலார் துவராடை யுடுப்போர் கிடையா நெறியான் கெழுமும் இடமென்பர் அடையார் புரம்வேவ மூவர்க் கருள்செய்த விடையார் கொடியான் அழகார் விடைவாயே.

ஆறும் மதியும்பொதி வேணியன் ஊராம் மாறில் பெருஞ்செல்வம் மலிவிடை வாயை நாறும் பொழிற்காழியர் ஞானசம் பந்தன் கூறுந் தமிழ்வல்லவர் குற்றமற் றோரே.

Info ID :179 Name :sivanadimai Date :2009/11/06-14:06:22

nice temple

FROM THE IP ADDRESS :118.95.16.221 DATE:2009/07/31-05:35:31
Info ID :89 Name :senthamilTOholyindia Date :2009/08/01-04:16:03
Thiruvidaivoi