HolyIndia.Org
Holy India Org Add New Temple
கோயில் : 0255-திருவலிதாயம் (சென்னை)
சிவஸ்தலம் பெயர் : திருவலிதாயம் (சென்னை)
இறைவன் பெயர் : வலிதாய நாதர், வல்லீஸ்வரர்
இறைவி பெயர் : ஜகதாம்பாள், தாயம்மை,
எப்படிப் போவது : சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 12 Km தொலைவில் சென்னை நகரின் மேற்குப் பகுதியில் பாடி என்னும் இடத்தில் இத்தலம் அமைந்துள்ளது.
சிவஸ்தலம் பெயர் : திருவலிதாயம் (சென்னை)
மற்றவை தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி
உங்களிடமிருந்துதேவை இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும்
-தேவாரப் பதிகம் :-தல மரம் :-தீர்த்தம் :- வழிபட்டோர்:-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் :
விவரம் அளிக்க இங்கே தட்டவும்
ஆலயம் பற்றி :

சென்னையின் ஒரு பகுதியான பாடி என்ற இடத்தில் அமைந்துள்ள வல்லீஸ்வரர் ஆலயம் தேவார காலத்தில் திருவலிதாயம் என்று வழங்கப்பட்டது. சென்னை - ஆவடி சாலையில் பாடி டிவிஸ் லூகாஸ் பேருந்து நிறத்தத்தில் இறங்கி எதிரே உள்ள கிளைப் பாதையில் சென்று இக்கோவிலை அடையலாம். பாரத்துவாஜ முனிவர் கருங்குருவி (வலியன்) யாக வந்து இத்தலத்தில் இறைவனை வழிபட்டதால் வலிதாயம் என்று பெயர் பெற்றது. 3 நிலைகளை உடைய கிழக்கு வாசல் கோபுரமே பிரதான கோபுரம். கோபுர வாசல் வழியாக உள்ளே நுழைந்ததும் ஒரு விசாலமான வெளிப் பிரகாரம் உள்ளது. வலது புறத்தில் குரு பகவானுக்கு தனி சந்நிதி இருக்கிறது. குரு பரிகார தலங்களாக சொல்லப்படும் தலங்களில் திருவலிதாயமும் ஒன்றாகும். குரு பகவான் தன்னைப் பற்றி இருந்த தோஷம் நீங்க இத்தலத்தில் தவமிருந்தே சிவனருள் பெற்றார் என்பதால் இத்தலத்தில் குரு பகவானுக்கு தனி சிறப்புண்டு. வெளிப் பிரகாரத்தில் இருந்து உள் மண்டபத்தில் நுழைந்தவுடன் மூலவர் திருவலிதாயநாதர் சந்நிதி கிழக்குப் நோக்கி அமைந்திருக்கிறது. உள் பிரகாரத்தின் வலது புறம் தெற்கு நோக்கிய அம்பாள் தாயம்மை சந்நிதி இருக்கிறது.

உள் பிரகாரத்தில் சூரியன், 4 கரங்களுடன் உள்ள பாலசுப்ரமனியர், விநாயகர், தட்சினாமூர்த்தி, மஹாவிஷ்னு, பிரம்மா, துர்க்கை ஆகியோரின் உருவச்சிலைகள் இருக்கின்றன. சோமஸ்கந்தர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன், அனுமலிங்கம், மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதிகள் உள்ளன. பாரத்வாஜ முனிவரால் பிரதிஷ்டை செய்து வணங்கப்பட்ட ஒரு சிவலிங்கமும் உள் பிரகாரத்தில் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் சுப்பிரமணியராக ஒரு திருமுகத்துடனும் 4 திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. கோவிலில் உள்ள தூண்களில் நடராஜர், முருகர், கோதண்டராமர், மச்சாவதாரமூர்த்தி, கூர்மாவதாரமூர்த்தி ஆகியோரின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

பாரத்வாஜ தீர்த்தம்: ஒரு சமயம் பாரத்வாஜ மஹரிஷி சாபம் காரணமாக கருங்குருவி ஆனார். அவர் திருவலிதாயம் வந்து ஒரு தீர்த்தம் உண்டாக்கி இத்தலத்து இறைவனை பூஜை செய்து சாபவிமோசனம் பெற்றார். நவக்கிரஹ சந்நிதிக்கு எதிரே உள்ள கிணறு அவரால் உருவாக்கப்பட்ட பாரத்வாஜ தீர்த்தம் என்று கூறப்படுகிறது.

பிரம்மாவின் இரண்டு பெண்கள் கமலி, வல்லி என்பவர்கள் இத்தலத்து இறைவனை பூஜித்து, விநாயகரை இறைவன் ஆணைப்படி திருமணம் புரிந்து கொண்டனர் என்று தல புராணம் கூறுகிறது.

திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

...திருசிற்றம்பலம்...
குறிப்பு

Add more details about this temple
Add more photos


More details about this temple given by user:
மூலவர் : திருவல்லீஸ்வரர், திருவலிதமுடையநாயனார் உற்சவர் : - புராண பெயர் : திருவலிதாயம் அம்மன்/தாயார் : ஜெகதாம்பிகை தல விருட்சம் : பாதிரி, கொன்றை ஊர் : பாடி, திருவலிதாயம் தீர்த்தம் : பரத்வாஜ் தீர்த்தம் ஆகமம்/பூஜை : காமீகம் மாவட்டம் : சென்னை பழமை : 500-1000 வருடங்களுக்கு முன் மாநிலம் : Tamil Nadu பாடியவர்கள்: திருஞான சம்பந்தர், அருணகிரி திருவிழா: சித்திரையில் பிரம்மோற்ஸவம், தை கிருத்திகை, குரு பெயர்ச்சி. தல சிறப்பு: மூலவர் சுயம்பு மூர்த்தி. இவருக்கு மேல் உள்ள விமானம் கஜபிருஷ் ட (யானையின் பின்புறம்) அமைப்புடையது. திறக்கும் நேரம்: காலை 6.30மணி முதல் 12மணி வரை, மாலை4.30 மணி முதல் 8.30இரவு மணி வரை திறந்திருக்கும் முகவரி: போன்: பொது தகவல்: விநாயகரின் திருநாமம் வரசித்தி விநாயகர். ராஜகோபுரம் மூன்று நிலை உடையது. பிரார்த்தனை சுவாமியை வணங்கிட திருமணத்தடை, நோய்கள் நீங்கும், தெட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வணங்கிட ஞானம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பவுர்ணமியில் சுவாமியை வழிபட்டால் நற்பேறு கிடைக்கும். நேர்த்திக்கடன்: வியாழக்கிழமைகளில் இங்குள்ள குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வழிபட்டால் குரு சம்பந்தப்பட்ட தோஷம் விலகும். தலபெருமை: குருதலம்:வியாழன், தான் செய்த தவறால் தனது தமையனின் மனைவி மேனகையின் சாபம் பெற்றார். அவரை சந்தித்த மார்க்கண்டேய மகரிஷி, இத்தலத்தில் உள்ள சிவனை வணங்கினால், பாவம் நீங்கி மோட்சம் கிட்டும் என்றார். அதன்படி இங்கு வந்த வியாழன், புனித தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கி அருள் பெற்றார். இத்தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கிட தோஷங்கள் நீங்கும், குருபகவானை வணங்கினால் பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை.) பிரம்மபுத்திரிகளான கமலி, வல்லி ஆகிய இருவரையும் விநாயகர் இத்தலத்தில் தான் திருமணம் செய்து கொண்டார் என வரலாறு கூறுகிறது. இதற்கு சான்றாக இங்கு கமலை, வல்லிகளுடன் இருக்கும்படியான விநாயகரின் உற்சவர் சிலை உள்ளது. இத்தலம், நடுநாயகமாக இருக்க சுற்றிலும் மாலையிட்டது போல 11 திருத்தலங்கள்அமைந்திருப்பது சிறப்பு. இத்தலத்திற்கு வந்தாலே முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். பிரகாரத்தில் சுவாமியை நோக்கியபடி தனி சன்னதியில் குருபகவான், சிவலிங்கத்தை வழிபட்ட நிலையில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. சிவன், தனக்கு பூஜை பெறுவதை உரிமையாக உடையவர் என்பதால் இவர், "பலிதாயர்' என்றும் அழைக்கப்படுகிறார். பலி என்றால் பூஜை, தாயம் என்றால் உரிமை என்று பொருள். தல வரலாறு: வியாழபகவானின் மகனான பரத்வாஜர், கரிக்குருவியின் (வலியன்) பிள்ளையாக பிறந்தார். தான் பறவையாக பிறந்ததைக் கண்டு வருத்தமடைந்த பரத்வாஜர், பல புண்ணிய தலங்களுக்கும் சென்று சிவனை வணங்கி வந்தார். அவர் இங்கு வந்தபோது, கொன்றை மரத்தின் அடியில் எழுந்தருளியிருந்த சிவலிங்கத்தை கண்டார். லிங்கத்திற்கு பூஜை செய்து வழிபட்டார். அவருக்கு காட்சி தந்த சிவன், விமோசனம் கொடுத்து பறவைகளின் தலைவனாகும்படி அருளினார். எனவேதான், இத்தலம் "திருவலிதாயம்' என்றும், சிவன் "வலியநாதர்' என்றும் அழைக்கப்படுகிறார் பாடல்: தேவாரப்பதிகம் பத்தரோடு பலரும் பொலியம்மலர் அங்கைப் புனல்துõவி ஒத்தசொல்லி உகத்தவர்தாம் தொழுது ஏத்த உயர் சென்னி மத்தம் வைத்த பெருமான் பிரியாது உறைகின்ற வலிதாயம் சித்தம் வைத்த அடியாரவர் மேலடை யாமற்றிடர் நோயே. திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 21வது தலம்
Info ID :146 Name :sivanadimai Date :2009/09/02-21:44:00
padi