HolyIndia.Org
Holy India Org Add New Temple
கோயில் : 0250-திருப்பாசூர்
சிவஸ்தலம் பெயர் : திருப்பாசூர்
இறைவன் பெயர் : வாசீஸ்வரர், பாசூர் நாதர்
இறைவி பெயர் : தங்காதளி அம்மன்
எப்படிப் போவது : திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து 7 Km தொலைவிலும், திருவள்ளூர் நகர பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 3 Km தொலைவிலும் இந்த சிவஸ்தலம் உள்ளது. திருவள்ளூர் - திருத்தணி சாலையில் கடம்பத்தூர் செல்லும் சாலை பிரியும் இடத்தில் இக்கோவில் உள்ளது. சென்னையில் இரு
சிவஸ்தலம் பெயர் : திருப்பாசூர்
மற்றவை தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி
உங்களிடமிருந்துதேவை இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும்
-தேவாரப் பதிகம் :-தல மரம் :-தீர்த்தம் :- வழிபட்டோர்:-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் :
விவரம் அளிக்க இங்கே தட்டவும்
ஆலயம் பற்றி :

கிழக்கு மற்றும் தெற்கு திசைகளில் கோபுரங்கள் உடைய இவ்வாலயத்தில் 2 பிரகாரங்கள் உள்ளன. முதல் வெளிப் பிரகாரம் நல்ல அகலமான வெளிச்சுற்றாகும். வெளிப் பிரகாரத்தில் பார்ப்பதற்கு விசேஷமாக ஒன்றும் இல்லை. 2வது பிரகாரத்தில் சுவாமி, அம்பாள் மற்றும் சுப்பிரமணியர் சந்நிதிகள் இருக்கின்றன. மூலவர் வாசீஸ்வரர் சந்நிதியும், இறைவி தங்காதளி அம்மன் சந்நிதியும் தனித்தனி விமானங்களுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. இறைவன் கருவறை விமானம் கஜப்பிரஷ்ட அமைப்பைக் கொண்டது. அம்மன் சந்நிதி சிவபெருமான் சந்நிதியின் வலதுபுறம் அமைந்துள்ளது. இவ்வாறு சுவாமி சந்நிதியின் வலதுபுறம் அம்மன் சந்நிதி உள்ள சிவஸ்தலங்களுக்கு ஆக்க சக்தி அதிகம் உண்டு என்று சாத்திரங்கள் கூறுகின்றன. இங்குள்ள ஈஸ்வரர் ஒரு சுயம்பு லிங்கமாகும். இந்த சிவலிங்கத்தை யாரும் தீண்டுவதில்லை. அலங்காரங்கள் கூட பாவனையாகத்தான் நடைபெறுகிறது. சுவாமி தீண்டாத் திருமேனி என்று அழைக்கப் படுகிறார். சுவாமி சந்நிதியின் இரு பக்கமும் துவாரபாலகர்கள் சிலைகள் கருத்தைக் கவரும் வகையில் உள்ளன. மூலவர் கருவறையில் நுழைவாயில் இடதுபுறம் ஏகாதச விநாயகர் சபை இருக்கிறது. இதில் சிறிதும் பெரிதுமாக 11 விநாயக திரு உருவச்சிலைகள் காண்போர் கருத்தை கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ளன. கருவறை சுற்றுச் சுவர்களில் கோஷ்ட மூர்த்தங்களாக தட்சினாமூர்த்தி, அன்னாமலையார், துர்க்கை, பிரம்மா ஆகியோர் உள்ளனர். உட்பிரகாரத்தில் தேவார மூவரின் உருவச்சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன.

கரிகாலச் சோழன் இக்கோவிலுடன் தொடர்பு உடையவன். ஒருமுறை சோழமன்னன் கரிகாலன் இந்த வழியாக மூங்கில் காட்டில் சென்று கொண்டு இருக்கும்போது மூங்கிற்புதரில் சிவலிங்கம் இருக்கக் கண்டு இவ்வாலயம் சிவபெருமானுக்கு எழுப்பினான் என்று தல வரலாறு கூறுகிறது. பாசு என்றால் மூங்கில். மூங்கில் காட்டில் சுயம்புவாகத் தோன்றிய இடத்தில் ஆலயம் உள்ளதால் திருப்பாசூர் என்று பெயர் பெற்றது. சோழர் காலத்திய கல்வெட்டுகள் ஆலயத்தின் உள்ளே காணப்படுகின்றன.

மகாசிவராத்திரி இத்தலத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப் படுகிறது. சிவராத்திரி அன்று இத்தலத்தில் சிவபெருமானை வழிபடுவது மிகவும் விசேஷமாகும்.

...திருசிற்றம்பலம்...
குறிப்பு

Add more details about this temple
Add more photos


More details about this temple given by user:
திருப்பாசூர் பேருந்து நிறுத்தம் (அ) திருவள்ளுரிலிருந்து ஷேர் ஆட்டோ
Info ID :246 Name :JAYAMOHAN Date :2010/03/31-04:53:51

Thiruppaasoor (திருப்பாசூர்) village is located about 50 kms from Chennai on the road going from Thiruvallur to Thiruthani and is about 7 kms from Thiruvallur Railway Station. Thiruppaasoor has a vast and beautiful temple for Lord Shiva. The main deity here is called Sri Vaaseeswarar and Goddess Sri Thankaadhali (தன்காதலி) Ambaal. It is believed that the Goddess worshipped Lord Shiva here and joined him to bless the devotees at this temple. Thiruppaasoor got its name from the ancient Thamizh word ‘Paasu’ (பாசு) which means Bamboo. It is said that the entire place was a bamboo forest during ancient days. Once the local hunters saw a cow pouring its milk on its own in the bamboo forest and they dug up the place to find this beautiful Shiva Lingam. On hearing this, Karikaal Chozha, the then ruler of this place, had visited Thiruppaasoor and built a temple for the Lord here. While people dug up the place, an axe like tool which was used to dig the ground hit on the Shiva Lingam and created a scar on Him. The axe like tool was called ‘Vaasi’ in Thamizh and hence the Lord here is called as Sri Vaaseeswarar. There were about 16 ancient stone inscriptions found in this temple. According to the inscriptions, this place is referred in ancient days as Thondai Mandalathu, Eekkaadu Kottathu, Kaakkalur Naattu Thiruppaasoor. It is also said that, Karikaal Chozha, who was an ardent devotee of Lord Shiva had to wage a war against Kurumbars who were troubling him. Some Jain saints, who were supporting Kurumbars, made a serpent attack the king. Karikaalan surrendered the Lord here and prayed for rescue. Pleased with his prayers, Lord Shiva tamed the serpent and saved Karikaalan. The Lord is said to have accepted the Goddess here as ‘His love’ and hence the Goddess got her name Thankaadhali (தன்காதலி). Usually in most of the Shiva temples, we can see the Goddess shrine at the left side of the sanctum of Lord Shiva. But here, the Goddess is seen on the right side of the Lord and also facing east, which is unusual and rare. Even today, the poojas and rituals are performed are first performed to the Goddess and then to Lord Shiva. Upon entering the temple, one can find a group of Vinayagar (Lord Ganesha) statues. This is another rare feature of this temple. There are about 11 Ganeshas in a group at the same place and of various sizes. Here Vinayagar is called Ekadasa Vinayagar (Ekadasa means 11 in Sanskrit). It is said that Lord Vishnu took bath here in Soma Theertham and worshipped Lord Shiva to get relieved of His Dhosham. There is another shrine for Lord Shiva called ‘Vinai Theertha Easwarar’ (வினை தீர்த்த ஈஸ்வரர்), who was worshipped by Lord Vishnu. There is a Sri Chakram in front of the sanctum, which was installed by Sri Aadhi Sankaraachaarya, for which poojas are performed regularly. Sri Subramanyar, Sri Somaskandhar & Navagrahas are found in the praakaaram. Sri Dhakshinamurthy has a small separate mandapam facing South. Sri Lingothbavar is found behind the sanctum. Sri Vishnu Durgai, Sri Veerabadhrar and Sorna Bhairavar are found at the northern side of the praakaaram. Thirunaavukkarasar, Thirugnaana Sambandar & Ramalinga Vallalaar have visited this temple and have sung praises on the Lord here. There is a beautiful 4 pillared Urchava Mandapam at the outer praakaaram used for rituals during festivals. It is said that, apart from Sri Ambaal, many sages and saints like Maarkandeyar, Brighu, Roma Rishi, Bharadhwajar, Kaasyapar, Vashishtar, Naaradhar, Sugar, Abhimanyu, Viswamithrar and Vyaasar have worshipped Sri Vaaseeswarar here. The Sthala Viruksham for this temple is Bamboo and there are two Theerthams for this temple; Soma Theertham and Mangala Theertham. The wonderful scenic view of the temple from the roadside itself is sure to attract anyone to visit and have the Dharshan of the Lord. FROM THE IP ADDRESS :122.164.187.166 DATE:2009/03/27-09:01:07


Info ID :84 Name :senthamilTOholyindia Date :2009/08/01-04:16:03
thirupachur