| சிவஸ்தலம் பெயர் : | திருவன்பார்த்தான் பனங்காட்டுர் ( திருப்பனங்காடு ) |
| இறைவன் பெயர் : | பனங்காட்டு ஈஸ்வரர், தாளபுரீஸ்வரர், கிருபாநாதேஸ்வரர் |
| இறைவி பெயர் : | அமிர்தவல்லி, கிருபாநாயகி |
| எப்படிப் போவது : | காஞ்சிபுரத்தில் இருந்து 16 Km தொலைவில் இந்த சிவஸ்தலம் இருக்கிறது. காஞ்சிபுரத்தில் இருந்து பெருங்காட்டூர் செல்லும சாலையில் திருப்பனங்காடு கூட்டு ரோடு வழியாகச் செல்ல வேண்டும. காஞ்சிபுரத்தில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன. |
| சிவஸ்தலம் பெயர் : | திருவன்பார்த்தான் பனங்காட்டுர் ( திருப்பனங்காடு ) |
| மற்றவை | தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி |
| உங்களிடமிருந்துதேவை | இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும் -தேவாரப் பதிகம் :-தல மரம் :-தீர்த்தம் :- வழிபட்டோர்:-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் : விவரம் அளிக்க இங்கே தட்டவும் |
| ஆலயம் பற்றி : கோவில் அமைப்பு: இந்த ஆலயத்தில் இரண்டு மூலவர் சந்நிதிகளும் இரண்டு அம்பாள் சந்நிதிகளும் இருக்கின்றன.கயிலை மலையில் சிவன் பார்வதி கல்யாணம் நடைபெறும் சமயம் தேவர்கள் எல்லோரும் அங்கு கூடியதால் பாரம் அதிகரித்து வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. அதனை சமன் செய்ய அகத்திய முனிவரை தென் திசை நோக்கிச் செல்லும் படி சிவபெருமான் பணித்தார். அதன்படி தென்திசை வந்த அகத்தியர் இத்தலத்தில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார். அகத்தியர் ஸ்தாபித்து வழிபட்ட ஈசன் தாளபுரீஸ்வரர் என்ற பெயரில் இஙகு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அகத்திய முனிவரின் சீடரான புலத்தியர் இத்தலம் வந்தபோது தாளபுரீஸ்வரருக்கு அருகில் மற்றொரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார். இந்த மூலவர் கிருபாநாதேஸ்வரர் என்று போற்றப்படுகிறார். அதே போல் இரண்டு அம்பிகைள் அமிர்தவல்லி, கிருபாநாயகி என்ற பெயர்களுடன் தனித்தனி சந்நிதிகளில் வீற்றிருக்கின்றனர். அகத்தியர் தான் ஸ்தாபித்த ஈசன் தாளபுரீஸ்வரருக்கு பனம்பழம் படைத்து வழிபட்டதால் பனைமரமே தலமரமாக விளங்குகிறது. இதனாலேயே இறைவன் பனங்காட்டீசர் என்றும் அழைக்கப்படுகிறார். ...திருசிற்றம்பலம்... | |