HolyIndia.Org
Holy India Org Add New Temple
கோயில் : 0182-திருக்காறாயில் ( திருக்காரவாசல்)
சிவஸ்தலம் பெயர் : திருக்காறாயில் ( திருக்காரவாசல்)
இறைவன் பெயர் : கண்ணாயிரநாதர்
இறைவி பெயர் : கைலாயநாயகி
எப்படிப் போவது : திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலை வழியில் திருவாரூரில் இருந்து 13 கி.மி. தெற்கே இத்தலம் உள்ளது. இத்தலத்திற்கு அருகில் திருநெல்லிக்கா, திருகைச்சினம், திருக்கொள்ளிலி ஆகிய பாடல் பெற்ற சிவஸ்தலங்களும் உள்ளன.
சிவஸ்தலம் பெயர் : திருக்காறாயில் ( திருக்காரவாசல்)
மற்றவை தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி
உங்களிடமிருந்துதேவை இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும்
-தேவாரப் பதிகம் :-தல மரம் :-தீர்த்தம் :- வழிபட்டோர்:-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் :
விவரம் அளிக்க இங்கே தட்டவும்
ஆலயம் பற்றி :
திருக்காறாயில் சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும். இத்தலத்து தியாகராஜர் ஆதிவிடங்கர் எனப்படுகிறார். நடனம் குக்குட நடனம். திருக்காறாயில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்ற தலமாகும். இங்குள்ள தீர்த்தம் சேஷ தீர்த்தம். இது ஆலயத்தின் வடக்குப் பிரகாரத்தில் உள்ளது. புரட்டாசி மாதம் பௌர்ணமி நாளில் இந்திரன் சேஷ தீர்த்தத்தில் நீராடி இத்தலத்து விநாயகர் கடுக்காய் பிள்ளையாரை பூஜிப்பதாக ஐதீகம். ஒவ்வொரு பௌர்ணமியிலும் இந்த சேஷ தீர்த்தத்து நீரைப் பருகி வந்தால் தீராத நோய்களும் நீங்கும் என்று சொல்லப்படுகிறது. இத்தலத்து விநாயகர் கடுக்காய் பிள்ளையர் என்று பெயர் பெற ஒரு தலபுராண வரலாறு உண்டு.வணிகன் ஒருவன் இத்தலத்து வழியே வர்த்தக நிமித்தமாக வரும் போது இங்குள்ள சேஷ தீர்த்தக்கரையில் இளைப்பாறினான். அவனுடன் வந்த வண்டியில் ஜாதிக்காய் மூட்டைகள் இருந்தன. அவனிடம் திருவிளையாடல் புரிய நினைத்து விநாயகர் ஒரு சிறுவனாக வணிகன் முன்வந்து மூட்டைகளில் என்ன இருக்கிறது என்று கேட்டார். வணிகன் வேண்டுமென்றெ கடுக்காய இருக்கிறது என்று பதில் கூறினான். விநாயகர் புன்னகை புரிந்தார். வணிகன் தான் சேர வேண்டிய இடம் வந்ததும் மூட்டைகளைப் பிரித்துப் பார்க்க அவைகளில் கடுக்காய் இருக்கக் கண்டு திடுக்கிட்டான். ஏதோ தெய்வ குற்றம் செய்து விட்டோம் என்று உணர்ந்த அவன் இறைவனிடம் முறையிட்டு பிழை பொறுத்தருள வேண்டினான். விநாயகப் பெருமான் அவன் முன் காட்சி கொடுத்து கடுக்காயை ஜாதிக்காய்களாக மாற்றி அருள் புரிந்தார். அது முதல் இத்தலத்து விநாயகர் கடுக்காய் பிள்ளையார் என்ற பெயருடன் இத்தலத்தில் பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார்....திருசிற்றம்பலம்...
குறிப்பு

Add more details about this temple
Add more photos


More details about this temple given by user:
Temple authority: AR Karuppan Chetty Managing Trustee Tirukaravasal Arunachalam Chettiar Charitable Trust Muthu KR AR Building South St, Thirukaravasal Post, Thiruvaarur Dt - 610202. Temple address: Main Road Thirukkaravasal post Thiruvarur Dist Tamil Nadu 610 202 Bus Rout: Thiruvarur TO Thiruthuraipoondi Bus station: Thirukkaravasal
Info ID :219 Name :vijayakumar - 00971508846489 Date :2009/12/28-11:31:36
clik to view photoதிருக்காரவாசல் மரகதலிங்கம் மீண்டும் கோயிலில்!! மிக்க மகிழ்ச்சி உடன் உங்களிடம் இந்த இனிப்பான செய்தியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் அருள்மிகு தியாகராஜா சுவாமி திருக்கோயிலில் 1992 -இம் ஆண்டில் திருடப்பட்ட மரகத லிங்கத்தை 17 ஆண்டுகளுக்குப் பிறகு போலீசார் கண்டுபிடித்து கோயில் இடம் ஒப்படைத்தனர். இந்த மரகத லிங்கம் மிகவும் அறியதானது. நாட்டிலே ஏழு சப்த விடங்களில் மட்டுமே உள்ளது. 17 ஆண்டுகளுக்கு பிறகு திரும்பயுள்ள மரகத லிங்கதால் திருகாரவாசலுக்கு நல்லது நடக்க எல்லாம் வல்ல இறைவனை வணங்குகிறேன்.
Info ID :218 Name :vijayakumar - 00971508846489 Date :2009/12/28-11:25:20
(1) அஜபா நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே? அஜபா நடனம்- சிவபெருமான் மேல்மூச்சில், கீழ்மூச்சில் (தவளை போல்) அசைந்தாடிய நடனம். ஆடிய தலம்- திருவாரூர். (2) உன்மத்த நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே? சிவபெருமான் பித்தனைப் போல் தலை சுற்றி ஆடிய நடனம் உன்மத்த நடனம் ஆகும். ஆடிய தலம் -திருநள்ளாறு. (3) தரங்க நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே? தரங்க நடனம் என்பது கடல் அலைபோல் அசைந்து ஆடுவது. இதை சிவபெருமான் நாகப்பட்டினத்தில் ஆடினார். (4)குக்குட நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே? குக்குட நடனம் என்பது கோழி போல் ஆடுவது. ஆடிய தலம் - திருக்காறாயில். (5) கமல நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே? கமல நடனம் என்பது தாமரை காற்றில் அசைவது போல் ஆடுவது. ஆடிய தலம்- திருவாய்மூர். (6) ஹம்சபாத நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே? ஹம்சபாத நடனம் என்பது அன்னம் போல அடியெடுத்து ஆடுவது. ஆடிய தலம்- திருமறைக்காடு (வேதாரண்யம்)
Info ID :217 Name :vijayakumar - 00971508846489 Date :2009/12/28-11:20:16
www.thirukaravasal.blogspot.com. www.thirukkaravasal-thiyagarajar.blogspot.com for more information go to the above website.
Info ID :216 Name :vijayakumar Date :2009/12/28-11:18:17
i need more information of this temple. it\'s very great.
Info ID :215 Name :vijayakumar Date :2009/12/28-11:16:38
It is said that if you take oil bath with the thailam given in the temple and eat the prasadam for 48days all diseases pertaining to your eye will go away
Info ID :214 Name :uma Date :2009/12/28-05:18:30
thirukkaravasal