HolyIndia.Org
Holy India Org Add New Temple
கோயில் : 0167-திருப்பாதாளீச்சரம் (பாமணி )
சிவஸ்தலம் பெயர் : திருப்பாதாளீச்சரம் (பாமணி )
இறைவன் பெயர் : நாகநாதசுவாமி, சர்ப்ப புரீசுவரர்
இறைவி பெயர் : அமிர்தநாயகி
எப்படிப் போவது : மன்னார்குடிக்கு வடக்கே நகர எல்லையில் 2 கி.மி. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. மன்னார்குடியில் இருந்து நகரப் பேருந்து வசதி உண்டு
சிவஸ்தலம் பெயர் : திருப்பாதாளீச்சரம் (பாமணி )
மற்றவை தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி
உங்களிடமிருந்துதேவை இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும்
-தேவாரப் பதிகம் :-தல மரம் :-தீர்த்தம் :- வழிபட்டோர்:-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் :
விவரம் அளிக்க இங்கே தட்டவும்
ஆலயம் பற்றி :
...திருசிற்றம்பலம்...
குறிப்பு

Add more details about this temple
Add more photos


More details about this temple given by user:
இக்கோவிலை திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும், திருநாவுக்கரசர் தனது ஷேத்திரகொவயிலும், சுந்தரமூர்த்தி நாயனார் திருநாட்டுதொகைளும், உமாபதி சிவாச்சாரியார் திருபதிககொவைளும், சிவஷேத்திரகொவைளும் பாடியுள்ளனர். சேக்கிழார் பெரியபுராணத்தில் திருஞானசம்பண்டமூர்த்தி நாயனார் புராணத்தில் 896 வது பாடலில் சம்பந்தர் வழிபட்டதையும் சேரமான் பெருமான் நாயனார் புராணத்தில் 119 - 120 ம் பாடலில் சுந்தரர் வழிபட்டதையும் குறிப்பிட்டுளார். இக்கோவிலை ராஜராஜ சோழன் - I , ராஜராஜசோழன் - iii , சுந்தரபாண்டியன் ஆகியோர் வழிபட்ட கல்வெட்டு சான்றுகள் உள்ளன. ஸ்தல விருட்ஷம் : மாமரம் தீர்த்தங்கள்: பிரம்ம தீர்த்தம் (சன்னதி எதிரில்) தேனு தீர்த்தம் (கோவில் தென்புறம்) ருத்ர தீர்த்தம் (கோவில் வடபுறம் - தற்போது வெட்டுகளும்) நிலத்வாஜா தீர்த்தம் (கோவில் மேல்புறம்) நதி: பாம்பணி ஆறு (பாமணி ஆறு) பிரகாரங்கள்: இரண்டு தல அமைப்பு: சுவாமி கிழக்கு நோக்கிய சன்னதி. அதன் வாசலிலேயே மகாமண்டபத்தில் வடபுறம் நோக்கி சுவாமியை வணங்கிய நிலையில் மனித முகமும் சர்ப்ப உடலுமாய் தனஞ்செய முனிவராக வந்த ஆதிசேஷன். நர்த்தன விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, சண்டிகேஸ்வரர், விஷ்ணுதுர்க்கை, ஆக்ன்கா கணபதி, நாககிங்கம், காலின்கனர்த்தனருடன் கூடிய மும்மூர்த்தி விநாயகர், வள்ளி தேவசெனாபதியுடன் கூடிய சுப்பிரமணியர், பஞ்சலிங்கம், கஜலக்ஷ்மி, மேற்கு நோக்கிய சநீஸ்வரருடன் கூடிய பைரவர், நவக்கிரகங்கள், நால்வர், சூரியன் சேன்றேன் ஆகியோருடன் உள்ள பிரகாரத்தை வளம் வந்தால் அது ஓம் என்ற வடிவில் இருக்கும். ஆதிசேஷன் வணங்கியதால் சுவாமியை சர்பபுரீஸ்வரர் என்றும் நாகநாதசுவாமி என்றும் அழைக்கிறோம் . சுவாமியின் மேல் பாம்புகள் ஊர்ந்ததால் பாம்பணி நாதர் என்றும் அழித்தனர். அதனால் இவ்வூர் பாம்பணி என்று அழைக்கப்பட்டது. தற்போது பாமணி என்று மருவியது. சுவாமி சுயம்பு லிங்கம் புற்று மண்ணால் ஆனது. ஆனால் எந்தவிதமான கவசமும் இல்லாமல் சுவாமிக்கு நேரடியாக தினமும் இருவேளை அபிஷேகம் நடைபெறுகிறது. சிவன் கோவிலின் எல்லா விசேஷங்களும் சிறப்பாக நடைபெறுகிறது. ஆதிசேஷன் சன்னதியில் ராகுகாலத்தில் ராகு கேது, காலசர்ப்ப தோஷபரிகார பூஜை நடைபெறுகிறது. ஐப்பசி 1 ம் தேதி நிறைபணி விழா நடைபெறுகிறது. அன்று ஆதிசேஷன் சுவாமியை வணங்கிய நாள். அன்று குறிப்பிட்ட காய்கறிகளுடன் சமைத்து அன்னதானம் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.
Info ID :210 Name :V.Ananthanarayanan Sharma Date :2009/12/22-03:15:39
pamani