| சிவஸ்தலம் பெயர் : | திருதர்மபுரம் |
| இறைவன் பெயர் : | தர்மபுரீஸ்வரர், யாழ்முறிநாதேஸ்வரர் |
| இறைவி பெயர் : | மதுர மின்னம்மை, அபயாம்பிகரி, தேனமிர்தவல்லி |
| தல மரம் : | வாழை |
| தீர்த்தம் : | தரும தீர்த்தம், பிரம தீர்த்தம். |
| வழிபட்டோர்: | நான்முகன் |
| எப்படிப் போவது : | இத்தலம் காரைக்கால் நகரில் அமைந்துள்ளது. திருதெளிச்சேரி என்ற பாடல் பெற்ற சிவஸ்தலமும் அருகில் இருக்கிறது. |
| சிவஸ்தலம் பெயர் : | திருதர்மபுரம் |
| மற்றவை | தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி |
| உங்களிடமிருந்துதேவை | இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும் -தேவாரப் பதிகம் :-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் : விவரம் அளிக்க இங்கே தட்டவும் |
| ஆலயம் பற்றி : தல வரலாறு இவ்வூருக்கு அருகில் உள்ள, புத்தர்கள் வசிக்கப்பெற்ற போதிமங்கைக்கு அருகில் சம்பந்தர் திருக்கூட்டத்தோரோடு வருகையில், புத்தர்கள் அவரை வலிய வாதுக்கு அழைத்து சம்பந்தரின் அடியாரிடத்துத் தோற்றனர். சிறப்புக்கள் பங்குனி மாதத்தில் 13ஆம் நாள் முதல் சூரிய பூஜைச் சிறப்பாக நடைபெறுகிறது. கோவில் மேற்கு நோக்கியது. காரைக்கால் நகரின் ஒரு பகுதியாகும். தல வரலாறு மார்க்கண்டேயரின் உயிரைப் பறித்த பிழை நீங்க எமன் (தருமன் - தருமராஜா) வழிபட்ட பதியாதலின் தருமபுரம் என்று பெயர் பெற்றது. சிறப்புக்கள் ஞானசம்பந்தரின் யாழ்முரிப் பதிகம் பெற்ற சிறப்புடைய தலம். இத்தலத்தில்தான் திருஞான சம்பந்தரின் இசை, திருநீலகண்ட யாழ்ப்பாணரின் யாழிசையில் அடங்காமையை இறைவன் வெளிப்படுத்தினார். திருநீலகண்ட யாழ்ப்பாணரின் அவதாரத் தலம். சுவாமி சந்நிதி முகப்பு வாயில் மேலே ஒருபுறம் சம்பந்தர் பாட, யாழ்ப்பாணர் யாழ் வாசிக்க அவர் மனைவி பக்கத்தில் நிற்பது போலவும், மறுபுறம் சம்பந்தர், யாழுடன் பாணர், அவர் மனைவி ஆகியோருடன் நிற்பதுபோலவும் சுதை வேலைப்பாடுகள் உள்ளன. அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருநள்ளாற்றிலிருந்து காரைக்கால் செல்லும் பேருந்துச் சாலையில் 2 கி. மீ. சென்று வலப்புறமாக பிரியும் (பெயர்ப் பலகை உள்ளது) பாதையில் சென்றால் இக்கோயிலை அடையலாம். கோயல் வரை வாகனங்களில் செல்லலாம். ...திருசிற்றம்பலம்... | |