| சிவஸ்தலம் பெயர் : | திருவேட்டக்குடி |
| இறைவன் பெயர் : | திருமேனி அழகர், சுந்தரேஸ்வரர் |
| இறைவி பெயர் : | சௌந்தரநாயகி, சாந்தநாயகி |
| தல மரம் : | புன்னை (தற்போது இல்லை) |
| தீர்த்தம் : | தேவதீர்த்தம் |
| வழிபட்டோர்: | அருச்சுனன். |
| எப்படிப் போவது : | காரைக்கால் அருகில் இத்தலம் இருக்கிறது. |
| சிவஸ்தலம் பெயர் : | திருவேட்டக்குடி |
| மற்றவை | தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி |
| உங்களிடமிருந்துதேவை | இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும் -தேவாரப் பதிகம் :-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் : விவரம் அளிக்க இங்கே தட்டவும் |
| ஆலயம் பற்றி : தல வரலாறு கோயில் அமைந்துள்ள பகுதி 'கோயில் மேடு ' என்றழைக்கப்படுகிறது. அருச்சுனன் வந்து தவஞ்செய்ய, இறைவன் வேட வடிவத்தில் வெளிப்பட்டு அருள் செய்ததாகப் புராண வரலாறு சொல்கிறது. இத்தலத்தில் உமாதேவி மீனவர் குலத்தில் வந்து அவதரித்ததாகப் புராண வரலாறு கூறுகிறது. சிறப்புக்கள் வேடனாக வந்த தலமூர்த்தி, வேடுவச்சியாக வந்த அம்பாள் ஆகிய (வேடரூபர், வேடநாயகி) திருமேனிகள் சிறப்பானவை; வேடரூபர், கையில் வில்லேந்திக் கம்பீரமாக காட்சித் தருகிறார். ஆண்டுதோறும் மாசி மகத்தன்று திருமேனியழகரான சுவாம வேடமூர்த்தியாகக் காட்சி தந்து கடல் நீராடுகிறார்; இது "கடலாடுவிழா " என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இத்தலத்தில் உமாதேவி மீனவர் குலத்தில் வந்து அவதரித்ததாகப் புராண வரலாறு கூறுவதால் இக்'கடலாடு விழா 'வை கடலோர ஊர்களில் வாழும் மீனவர்கள் ஏற்று நடத்துகிறார்கள். மாசிமகத்தில் இக்கோயில் தீர்த்தத்தில் நீராடுவது சிறப்பானதாகச் சொல்லப்படுகிறது. ...திருசிற்றம்பலம்... | |