| சிவஸ்தலம் பெயர் : | திருதலைச்சங்காடு |
| இறைவன் பெயர் : | சங்கருணாதேஸ்வரர் |
| இறைவி பெயர் : | சௌந்தரநாயகி, பிரஹத் சுந்தராம்பிகை |
| தல மரம் : | புரசமரம் |
| தீர்த்தம் : | சங்குதீர்த்தம் (பௌர்ணமியன்று நீராடுதல் சிறப்பு), காவிரி |
| வழிபட்டோர்: | திருமால் |
| எப்படிப் போவது : | மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 18 கி.மி. தூரத்தில் இத்தலம் உள்ளது. அருகில் திருஆக்கூர் என்ற பாடல் பெற்ற ஸ்தலம் இருக்கிறது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருதலைச்சங்க நான்மதியம் என்ற கோவிலும் சிவன் கோவிலில் இருந்து அருகாமையில் உள் |
| சிவஸ்தலம் பெயர் : | திருதலைச்சங்காடு |
| மற்றவை | தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி |
| உங்களிடமிருந்துதேவை | இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும் -தேவாரப் பதிகம் :-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் : விவரம் அளிக்க இங்கே தட்டவும் |
| ஆலயம் பற்றி : தல வரலாறு திருமால் இறைவனைப் பூஜித்துப் பாஞ்சசந்யம் எனும் சங்குப் பெற்றத் தலம். சிறப்புக்கள் இவ்வூர், சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள, பெருமை வாய்ந்தது. சோழர் காலக் கல்வெட்டுகள் பத்து உள்ளன. ...திருசிற்றம்பலம்... | |
விக்கிரமசோழன் காலத்தில் மும்முடிச் சோழன் காலத்தில் மும்முடிச் சோழன் பேரம்பலத்தில் தலைச்சங்காட்டு மூலபுருஷர் கூடிட இளவரசி சொற்படி வெற்றிலை முளைக்கவும் இன்றி, ஆனை வைக்கவும் இராசராச நல்லூரில் பூதானம் செய்யப்பட்டது.
மாடல மறையோன் மன்னவற்கு உரைக்கும்: 'கானல் அம் தண் துறைக் கடல் விளையாட்டினுள் மாதவி மடந்தை வரி நவில் பாணியோடு, ஊடல் காலத்து, ஊழ்வினை உருத்து எழ, கூடாது பிரிந்து, குலக்கொடி- தன்னுடன்
திருஞானசம்பந்தர் தனது தாயர் ஊரான புஞ்சைக்கு வந்தபோது தலைச்சங்காட்டு அடியார்கள் சென்று அழைத்து வந்தனர்
இந்த சிவதலம் அருகோ ஒர் வைணவத்தலம் உள்ளது இது 108 திருபதிகளில் ஒன்று
தலபெருமை:
பெருமாளின் 108 திருப்பதிகளுள் 25வது தலம் இது. இத்தலத்தின் பெருமாள் சிவனைப்போல் தலையில் சந்திரனை சூடிய நிலையில் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சிதருகிறார். இதனாலேயே இவர் நாண்மதியப்பெருமாள் என்றும், சந்திரசாபஹரர் என்றும் வழங்கப்படுகிறார். இவருக்கு மேல் உள்ள விமானம்-சந்திர விமானம்
தல வரலாறு:
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது அதிலிருந்து மகாலட்சுமிக்கு முன்னதாக தோன்றியவர் சந்திரன். இவர், லட்சுமியின் அண்ணன் ஆவார். நவகிரகத்தில் சூரியனுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர். அத்திரி முனிவருக்கும், அனுசுயா தேவிக்கும் பிறந்தவர்களில் சோமன் என்பவரே சந்திரன் என்றும் புராணங்கள் கூறுகிறது. சந்திரன் மிக அழகானவர். இவர் தேவகுருவிடம் கல்வி கற்று பல கலைகளில் தேர்ச்சி பெற்றவர். இவர் ஒரு முறை மகாவிஷ்ணுவை குறித்து "ராஜசூய யாகம்' செய்தார். சகல வெற்றிகளையும் தரும் இந்த யாகத்திற்கு ஏராளமான முனிவர்கள் வந்திருந்தனர். இவர்களுடன் தேவகுருவின் மனைவி தாரையும் வந்தாள். சந்திரனும், தாரையும் நேருக்கு நேர் பார்த்ததும் இருவரும் விரும்பத் தொடங்கினர். அதிர்ச்சியடைந்த குரு, திருமாலிடம் முறையிட்டார். சீடன் செய்த குற்றத்தை மன்னிக்க முடியாதவராக அவனுக்கு குஷ்ட நோய் ஏற்பட சாபமிட்டார். இதற்கிடையில் சந்திரனுக்கும் தாரைக்கும் புதன் என்ற குழந்தை பிறந்தது. பின்னர் திருமால் கூறியபடி குருவிடம் மனைவியை ஒப்படைத்தான் சந்திரன். தந்தை மீது புதனுக்கு வெறுப்பு ஏற்பட்டு இமயமலையில் கடும் தவம் செய்து கிரக பதவியடைந்தான். இதைத்தவிர சந்திரன் இன்னொரு தவறும் செய்து விட்டான். தக்கனுக்கு 27 மகள்கள். இவர்கள் அனைவரும் சந்திரனை திருமணம் செய்து கொண்டார்கள். 27 பெண்களிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்துவதாக தக்கனிடம் சந்திரன் வாக்கு கொடுத்தான். ஆனால் ரோகிணியிடம் மட்டுமே மிகுந்த காதலுடன் இருந்தான். இதனால் மற்ற மனைவிகள் தங்களது தந்தையிடம் முறையிட்டனர். கோபம் கொண்ட தக்கன்,""உன் அழகும், ஒளியும் தினம் தினம் குறையட்டும்,''என சாபமிட்டான். சாபம் பலித்ததால், முழு சந்திரன் தேய தொடங்கினான். இரண்டு சாபங்களும் சந்திரனை வாட்டி வதைத்தது. வருத்தமடைந்த அவன் திருமாலிடம் சென்று தன் குறையை கூறினான். அதற்கு பெருமாள்,""சந்திரனே! நீ உடனே ஸ்ரீரங்கம், திருஇந்தளூர், தலைச்சங்கநாண்மதியம் ஆகிய மூன்று தலங்களுக்கு சென்று குளத்தில் நீராடி என்னை வழிபட்டால் உன் சாபம் நீங்கும்,''என்றார். அவர் கூறியபடி ஸ்ரீரங்கம், திருஇந்தளூர் சென்று வழிபட்ட சந்திரன் கடைசியாக தலைச்சங்காடு வந்து குளத்தில் நீராடி பெருமாளை வழிபட்டான். உடனே அவனுக்கு ஏற்பட்ட தோஷமும், நோயும் விலகியது. பெருமாள் அவனுக்கு காட்சி கொடுத்து அவனை அப்படியே தலையில் சூடிக்கொண்டார்.
People can reach out thalachangadu through bus from mayiladuthurai, sirkali and chidambaram Nearby railway station : 1. Mayiladuthurai (18 KM) 2. Sirkali (16 KM) Nearby railway Airport : 1. Thiruchirappalli (85 KM) Bus Stop:"Thalachagadu" People can get down @thalachangadu bus stop. frequent bus service avaialable from chidambaram,sirkali,karaikal, nagappattinum. Thalachangadu is on the way for the people whom commute from Chennnai, Pondi, Cudalore,Chidambaram,Sirkali To Thirukkadaiyur,karaikal and nagappattinum. Devotees can visit this template anytime between morning 7 PM to evening 7 PM. Priest's house is very nearby to the temple. This temple was renovated in the year of 2003.