| சிவஸ்தலம் பெயர் : | பழையாறை வடதளி |
| இறைவன் பெயர் : | சோமேஸ்வரர் - பழையாறை,தர்மபுரீஸ்வரர் - வடதளி |
| இறைவி பெயர் : | லோகாம்பிகை நாயகி - பழையாறை,விமலநாயகி - வடதளி |
| தல மரம் : | நெல்லி |
| தீர்த்தம் : | சோம தீர்த்தம் |
| வழிபட்டோர்: | கருடன், ஆதிசேஷன் |
| எப்படிப் போவது : | தஞ்சாவூர் - கும்பகோணம் ரயில் மார்க்கத்தில் உள்ள தாராசுரம் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி.மி. தொலைவில் பழையாறை வடதளி என்ற இந்த இரட்டை சிவஸ்தலம் இருக்கிறது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருநந்திபுர விண்ணகரம் என்ற கோவில் பழையாறைக்கு அருகில் உள்ளது. |
| சிவஸ்தலம் பெயர் : | பழையாறை வடதளி |
| மற்றவை | தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி |
| உங்களிடமிருந்துதேவை | இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும் -தேவாரப் பதிகம் :-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் : விவரம் அளிக்க இங்கே தட்டவும் |
| ஆலயம் பற்றி : வடதளி: பழையாறை வடதளி என்று அழைக்கப்படுமிடம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள பட்டீஸ்வரம் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து சிறிது தூரத்தில் இருக்கிறது. ஊர் என்று சொல்லும் அளவிற்கு வீடுகள் அதிகம் இல்லை. சோழ மன்னன் கோச்செங்கணான் கட்டிய மாடக் கோவில்களில் ஒன்றாக கருதப்படும் வடதளி கோவில் மிகவும் சிதிலமான நிலையில் காணப்படுகிறது. திருநாவுக்கரசர் இந்த வடதளிக்கு வந்திருக்கிறார். அவர் வந்த போது சமணர்கள் இந்த வடதளிக்கு முன்னால் தங்கள் மடத்தைக் கட்டிக் கோவிலை மறைத்ததொடு, மூர்த்தியையும் தாழி ஒன்றால் மூடி வைத்திருந்தார்கள். திருநாவுக்கரசர் பிடிவாதமாக சிவனை வழிபடாமல் திரும்ப மாட்டேன் என்று அங்கேயே தங்கிவிடுகிறார். இறைவனும் அந்த நாட்டு அரசன் கனவில் தோன்றி தான் இருக்குமிடத்தை அறிவித்துச் சமணர்களை அடக்குமாறு சொல்ல, அரசன் மறுநாள் அங்கு வந்து தாழியை அகற்ற வடதளி ஈசுவரர் வெளிப்பட்டார். இக்கோவிலில் மூலவர் தர்மபுரீஸ்வரர் சந்நிதியும், அம்பாள் விமலநாயகி சந்நிதியும் தவிர வேறு பார்ப்பதற்கு குறிப்பாக ஒன்றும் இல்லை. அப்பர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது: தல வரலாறு
சிறப்புக்கள்
| |