| சிவஸ்தலம் பெயர் : | திருவாட்போக்கி (ரத்னகிரி) |
| இறைவன் பெயர் : | வாட்போக்கி நாதர், ரத்னகிரிநாதர் |
| இறைவி பெயர் : | கரும்பார்குழலி |
| தீர்த்தம் : | காவிரி. |
| வழிபட்டோர்: | இந்திரன், சயந்தன், வாயு, ஆதிசேஷன் |
| எப்படிப் போவது : | குளித்தலைக்கு தெற்கே சுமார் 9 கி.மி. தொலைவில் ரத்னகிரி என்னும் இடத்தில் இத்தலம் அமைந்திருக்கிறது. குளித்தலை ரயில் நிலையம் திருச்சி - ஈரோடு ரயில மார்க்கத்தில் இருக்கிறது. |
| சிவஸ்தலம் பெயர் : | திருவாட்போக்கி (ரத்னகிரி) |
| மற்றவை | தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி |
| உங்களிடமிருந்துதேவை | இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும் -தேவாரப் பதிகம் :-தல மரம் :-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் : விவரம் அளிக்க இங்கே தட்டவும் |
ஆலயம் பற்றி :
தல வரலாறு
சிறப்புக்கள்
- இரத்தினகிரி, மாணிக்கமலை, சிவாயமலை, அரதனசலம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்களாகும்.
- அகத்தியர் இங்குச் சுவாமியை நண்பகலில் தரிசித்து அருள் பெற்றமையால் இங்கு நண்பகல் தரிசனம் விசேஷம். இதனால் இவ்விறைவன்
மத்தியான சுந்தரர் என்றும் வழங்குகிறார்.
- மூலவர் சுயம்பு மூர்த்தி. கோயில் மலைமேல் மிக உயரத்தில் உள்ளது. அழகாக அமைக்கப்பட்டுள்ள 1140 படிகளைக் கடந்து ஏறிச் செல்லவேண்டும்.
- சிவராத்திரி நாளில் அல்லது முன்பின் நாள்களில் சூரியஒளி, சுவாமிக்கு நேரே அமைக்கப்பட்டுள்ள சாளரம் வழியாக வந்து சுவாமி மீது படுகிறது.
- சிவலிங்கத்தின் முன்பு பொய்வாசிக் கொப்பரை என்னும் நீர்த்தொட்டி உள்ளது.
- இப்பெருமானுக்கு நாடொறும் அருகிலுள்ள காவிரியிலிருந்து 10 குடங்களில் நீர்கொண்டு வரப்பட்டு உச்சிக்கால அபிஷேகம் செய்யப்படுகிறது. (இன்றும் இப்பொறுப்பை
"பன்னிரண்டாம் செட்டியார் " என்னும் மரபினர் ஏற்றுக்கொண்டு, குருக்கள் மூலம் நடத்துவிக்கின்றனர்.)
அப்பர் பாடியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
கால பாசம் பிடித்தெழு தூதுவர்
பால கர்விருத் தர்பழை யாரெனார்
ஆல நீழ லமர்ந்தவாட் போக்கியார்
சீல மார்ந்தவர் செம்மையுள் நிற்பரே. ...திருசிற்றம்பலம்... |