HolyIndia.Org
Holy India Org Add New Temple
கோயில் : 0062-திருப்பாச்சிலாச்சிராமம் ( திருவாசி )
சிவஸ்தலம் பெயர் : திருப்பாச்சிலாச்சிராமம் ( திருவாசி )
இறைவன் பெயர் : மாற்றுரைவரதீஸ்வரர்
இறைவி பெயர் : பாலாம்பிகை, பாலசுந்தரி
தல மரம் : வன்னி
தீர்த்தம் : சிலம்பாறு. (பங்குனியாறு, அமலையாறு என்றும் கூறுவர்)
வழிபட்டோர்: பிரமன், லட்சுமி, உமாதேவி
எப்படிப் போவது : திருச்சியில் இருந்து 12 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் இருக்கிறது.
சிவஸ்தலம் பெயர் : திருப்பாச்சிலாச்சிராமம் ( திருவாசி )
மற்றவை தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி
உங்களிடமிருந்துதேவை இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும்
-தேவாரப் பதிகம் :-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் :
விவரம் அளிக்க இங்கே தட்டவும்
ஆலயம் பற்றி :

தல வரலாறு

  • "பாச்சில் கூற்றத்து ஆச்சிராமம் ஆதலின் பாச்சிலாச்சிராமம் என்று வழங்கப்பெற்றது"; திருவாசிராமம் என்பது மருவி இன்று திருவாசி என்று வழங்குகிறது.

  • கொல்லி மழவனின் புதல்விக்கு நேர்ந்த 'முயலகன்' நோயைச் சம்பந்தர் தீர்த்த பதி. இதனால் நடராசர் திருவடியில், முயலகனுக்குப் பதிலாக பாம்பு உள்ளது. நடராசர் சர்ப்ப நடன மூர்த்தியாக காட்சித் தருகிறார். ( 'முயலகன் என்பது வலிப்பும் வயிற்று வலியும் வரும் ஒரு வகை நோய்' )

சிறப்புக்கள்

  • சுந்தரர் பொன் பெற்றத் தலம்.

  • இத்தல இறைவன், சுந்தரர் தம் பொன்னை மாற்றுக் குறைவதாக உரைத்துக் காட்ட அறிந்த பிரான் - 'மாற்றறிவரதர் ' என்றும்; வன்னிசூழ்ந்த வனத்தில் உள்ளவராதலின் 'சமீவனேஸ்வரர் ' என்றும்; பிரமன் வழிபட்டவராதலின் பிரமபுரீசுவரர் என்றும் விளங்குகிறார்.
  • முதற் கோபுரத்திற்கும் இரண்டாம் பிராகாரத்திற்கும் இடையிலுள்ள மண்டபம் 'ஆவுடையாப்பிள்ளை மண்டபம் ' எனப்படுகிறது. இம்மண்டபத்தூணில் சந்பந்தர், கொல்லி மழவன், புதல்வியின் நோயைத் தீர்த்த சிற்பங்கள் அழகாக உள்ளன.
  • சுவாமி சந்நிதியில் சுந்தரருக்கு பொற்கிழி தந்த ஸ்தபன மண்டபம் உள்ளது. இவ்விடத்தைக் கல்வெட்டு "கிழி கொடுத்தருளிய திருவாசல்" என்ற பெயரால் குறிக்கின்றது.
  • இங்குள்ள சுந்தரர் மூர்த்தம், இரு கைகளிலும் தாளம் ஏந்திப்பாடும் அமைப்பில் உள்ளது.
  • இத்தல கல்வெட்டில் "பாச்சில் திருவாச்சிராமத்துப் பெருமானடிகள்" என்று இறைவனின் திருநாமம் குறிக்கப்படுகிறது.
  • இக்கோயிலுக்கு முதலாம் இராசராசன், சுந்தரபாண்டியன், முதற் குலோத்துங்கன், கிருஷ்ணதேவராயர் ஆகியோர் திருப்பணிகள் செய்துள்ளது தெரியவருகிறது.
  • கி. பி. 1253-ல் சமயபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட ஹொய்சளமன்னனான, வீரசோமேஸ்வரன் காலத்தில் இக்கோயிலுக்கு பதினாயிரம் கலம் நெல் கிடைத்து வந்ததாக கல்வெட்டு மூலம் அறிகிறோம்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
திருச்சி - சேலம் பேருந்துச் சாலையில் 12 கி. மீ. தொலைவில் உள்ளது.
...திருசிற்றம்பலம்...

குறிப்பு

Add more details about this temple
Add more photos


More details about this temple given by user:
1500 year before this temple was constructed. Bus facilities from Trichirappalli Chathram Bus stand in Town Bus bound for GUNACHEELAM. THOSE DIVOTEES COMING FROM NORTH TAMIL NADU LIKE CHENNAI, VELLORE, GET DOWN AT TOLL GATE NEAR KOLLIDAM RIVER A BRANCH OF RIVER CAUVERY. DEVOTEES COMING FROM SOUTH TAMIL NADU LIKE MADURAI HAS TO ARRIVE AT CHATRAM BUS STAND FOR BUSES TO THIRUVASI. UTHAMAR KOVIL AND PITCHANDAR KOVIL, THESE SIVAN TEMPLES ARE NEAR BY TEMPLES ON THE WAY ENROUTE TO THIRUVASI.AUTO, AND TAXIS ARE AVAILABLE AT TOLL GATE , CHATRAM BUS STAND COSTS RS. 40/150 ONE WAY. THIRUPPANZAZEELLEE IS ANOTHER NEAREST FAMOUS LORD SIVAN TEMPLE. STRAIGHT TOWN BUSES ARE AVAILABLE IN PLENTY TO THIRUPPANZEELLEE FROM THIRUCHIRAPPALLI TOWN CHATHRAM BUS STAND 30 KM DISTANCE VIA MANNCHANALLUR TOWN, A RICE BOWL OF TRICHIRAPPALLI DT.
Info ID :166 Name :A'MANOKARAN Date :2009/10/18-04:03:21
bus root no ; 60,60A,B,40 bus root;Main garegate-thiruvasi 14KM only bus fair;4 rs only from m.gate
Info ID :147 Name :ramamurthy Date :2009/09/04-20:51:02

FROM THE IP ADDRESS :202.54.176.11 DATE:2008/05/20-04:16:55

Info ID :74 Name :senthamilTOholyindia Date :2009/08/01-04:16:03
clik to view photoதிருவாசி ஆகாயத்திலிருந்து தோற்றம்
Info ID :39 Name :sen Date :2009/03/23-16:58:43
thiruvasi