| சிவஸ்தலம் பெயர் : | திருஅன்பில் ஆலாந்துறை (அன்பில்) |
| இறைவன் பெயர் : | சத்யவாகீஸ்வரர் |
| இறைவி பெயர் : | சௌந்தர நாயகி |
| தல மரம் : | ஆலமரம். |
| தீர்த்தம் : | சந்திர தீர்த்தம். |
| வழிபட்டோர்: | வாகீசமுனிவர், பிரமன் |
| எப்படிப் போவது : | லால்குடியில் இருந்து 8 Km தொலைவில் உள்ளது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான அன்பில் வடிவழகிய நம்பியின் ஆலயம் இத்தலத்திற்கு மிக அருகில் உள்ளது. அன்பில் மாரியம்மன் கோவிலும் சிவாலயத்தில் இருந்து அருகில் உள்ளது. |
| சிவஸ்தலம் பெயர் : | திருஅன்பில் ஆலாந்துறை (அன்பில்) |
| மற்றவை | தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி |
| உங்களிடமிருந்துதேவை | இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும் -தேவாரப் பதிகம் :-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் : விவரம் அளிக்க இங்கே தட்டவும் |
| ஆலயம் பற்றி : தல வரலாறு ஊர்ப் பெயர் - அன்பில்; கோயிலின் பெயர் - ஆலந்துறை. இங்குள்ள விநாயகர் 'செவிசாய்த்த விநாயகர் ' என்றழைக்கப்படுகிறார். கொள்ளிடத் தென்கரையில் நின்று பாடிய சம்பந்தரின் பாடல்களைச் செவிசாய்த்து கேட்டமையின், இவ்விநாயகர் இப்பெயர் பெற்றார். இத்தலத்தில் பராந்தகசோழன் குறியேற்றிய நூற்றெட்டு அக்னிஹோத்திரிகளின், ஜைமினி சாமவேத பாராணயத்தை(சம்பந்தர் பாடலைக் கேட்கும்) முன்னரே கேட்டருளிய இத்தல விநாயகர், 'சாமகானம் கேட்ட விநாயகர் ' என்றும் வழங்கப்படுகிறார். சிறப்புக்கள் துவாரபாலகர்களின் பக்கத்தில் பிரமன் வழிபடுகின்ற சிற்பம் உள்ளது. மூலவர் சிவலிங்கத் திருமேனி - சுயம்பு மூர்த்தி; சதுரபீட ஆவுடையார். இக்கோயில் பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்டது. அதற்கு முன்பு மாடக் கோயிலாக இருந்ததாம். முன்மண்டபத் தூணில் பாம்பின் வால் ஒருபுறமும் தலை மறுபுறமுமாக கல்லுள் நுழைந்து வந்திருப்பது போல உள்ள சிற்பமும், மற்றொரு தூணில் இருபாம்புகள் ஒன்றொடொன்று பலமுறை பின்னிக் கொண்டிருக்க மத்தியில் சிவலிங்கம் உள்ளதாக உள்ள சிற்பமும், முருகப் பெருமான் சிவலிங்கத்தை வழிபடும் சிற்பமும் கண்களுக்கு பெருவிருந்தாக உள்ளது. ...திருசிற்றம்பலம்... | |