| சிவஸ்தலம் பெயர் : | திருமழப்பாடி (பெரம்பாலூர் மாவட்டம்) |
| இறைவன் பெயர் : | வஜ்ரஸ்தம்பநாதர், வச்சிரதம்பேஸ்வரர் |
| இறைவி பெயர் : | அழகம்மை |
| தல மரம் : | பனை மரம் |
| தீர்த்தம் : | இலக்குமி தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம் (கொள்ளிடம் ) |
| வழிபட்டோர்: | நந்தி தேவர், திருமால், இலக்குமி, மார்க்கண்டேயர், இந்திரன், புருஷாமிருக ரிஷி |
| எப்படிப் போவது : | இந்த சிவஸ்தலம் திருவையாற்றில் இருந்து 13 கி.மி. தொலைவில் இருக்கிறது. அரியலூர் என்ற ஊரில் இருந்தும் மழபாடி வரலாம். |
| சிவஸ்தலம் பெயர் : | திருமழப்பாடி (பெரம்பாலூர் மாவட்டம்) |
| மற்றவை | தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி |
| உங்களிடமிருந்துதேவை | இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும் -தேவாரப் பதிகம் :-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் : விவரம் அளிக்க இங்கே தட்டவும் |
| ஆலயம் பற்றி : சுந்தரரை குரல் கொடுத்து அழைத்துத் தன் மேல் பாடல் பாட வைத்த சிவபெருமான் வீற்றிருக்கும் சிவஸ்தலம் மழபாடி. சுந்தரர் சோழ நாட்டு சிவஸ்தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டபோது ஒரு நதியைக் கடந்து செல்லும்படி நேர்ந்தது. அப்போது "சுந்தரா, என்னை மறந்தாயோ" என்ற குரல் கேட்டு திடுக்கிட்ட சுந்தரர் அக்குரல் தன்னை ஆட்கொண்ட சிவபெருமானின் குரல் என்பதை உண்ர்ந்தார். அருகில் எங்கேயாவது சிவன் கோவில் இருக்கிறதா என்று தன்னுடன் வந்த சீடர்களைக் கேட்டார். அவர்களும் அருகில் உள்ள மழபாடியில் ஒரு சிவன் கோவில் இருக்கிறது என்பதைக் கூறினார்கள். திருமழப்பாடி ஆலயத்திற்கு வந்த சுந்தரர் "தங்களை மறந்து விட்டு வேறு யாரை நினைப்பேன்" என்னும் கருத்து அமைத்து வஜ்ரஸ்தம்பநாதர் மேல் பதிகம் பாடியருளினார். அந்தப் பதிகம் இதோ! தல வரலாறு
சிறப்புக்கள்
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு | |