HolyIndia.Org
Holy India Org Add New Temple
கோயில் : 0052-திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்)
சிவஸ்தலம் பெயர் : திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்)
இறைவன் பெயர் : நெய்யாடியப்பர்
இறைவி பெயர் : இளமங்கையம்மை, பாலாம்பிகை
வழிபட்டோர்: சரசுவதி, காமதேனு, கௌதமமுனிவர்
எப்படிப் போவது : திருவையாற்றில் இருந்து மேற்கே 2 Km தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது.
சிவஸ்தலம் பெயர் : திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்)
மற்றவை தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி
உங்களிடமிருந்துதேவை இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும்
-தேவாரப் பதிகம் :-தல மரம் :-தீர்த்தம் :-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் :
விவரம் அளிக்க இங்கே தட்டவும்
ஆலயம் பற்றி :

திருநெய்த்தானம் சப்தஸ்தான தலங்களில் ஒன்றாகும். நெய்யாடியப்பர் ஆலயம் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தவுடன் விசாலமான வெளிப் பிரகாரம் இருக்கிறது. இராஜகோபுரத்திற்கு நேரே உள்ள கொடிமரம், பலிபீடம், நந்தியைத் தாண்டி உள் வாயில் வழியாகச் சென்றால் மூலவர் நெய்யாடியப்பர் சந்நிதி ஆலயத்தின் உட்பிரகாரத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. உள் பிரகாரம் சுற்றி வலம் வரும்போது சூரியன், ஆதிவிநாயகர், சனி பகவான், சரஸ்வதி, மகாலட்சுமி, காலபைரவர், சந்திரன், தட்சிணாமூர்த்தி ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. கருவறையில் மூலவர் நெய்யாடியப்பர் சற்றே ஒல்லியான மற்றும் உயரமான லிங்கத் திருமேனியுடன் நமக்குக் காட்சி தருகிறார்.

அம்பாள் சந்நிதி வெளிப் பிரகாரத்தில் வடக்கு நோக்கி அமைந்திருக்கிறது. அம்பாள் வாலாம்பிகை நின்ற கோலத்தில் நமக்கு அருட்காடசி தருகிறாள். அம்பாள் சிலை ஒரே கல்லில் வடிக்கப்பட்ட உருவமாகும். தட்சினாமூர்த்தி இங்கு நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். காமதேனு, சரஸ்வதி மற்றும் கெளதம முனிவர் இங்கு சிவபெருமானை வழிபட்டுள்ளனர்.

இத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்றுள்ளார். மூலவர் கருவறை பிரகாரத்தில் மூலவருக்கு நேர் பின்புறம் மேற்குச் சுற்றில் இவர் சந்நிதி உள்ளது. முருகப்பெருமான் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு நின்ற திருக்கோலத்தில் மயிலுடன் காட்சி தருகிறார். இருபுறமும் தேவியர் எழுந்தருளியுள்ளனர்

தல வரலாறு மக்கள் வழக்கில் தில்லைஸ்தானம் என்று வழங்கப்படுகிறது. சப்தஸ்தானத் தலங்களுள் இதுவும் ஒன்று. சிறப்புக்கள் இங்கு இறைவனுக்கு பசு நெய் அபிஷேகம் விசேஷமானது. அம்பிகையின் திருப்பெயர் தேவாரப் பதிகத்துள் இளமங்கையம்மை என்றும் குறிக்கப்படுகிறது. கல்வெட்டுக்களில் இத்தலம் "இராஜராஜ வளநாட்டு பைங்காநாட்டு திருநெய்த்தானம்" என்றும்; சுவாமியின் பெயர் நெய்த்தானமுடையார் என்றும் குறிக்கப்படுகிறது. இக்கல்வெட்டுக்களிலிருந்து, நிபந்தமாக நிலங்கள் அளித்தமை, விளக்கெரிக்கப் பொற்காசுகள் தந்தமை, ஊர்ச்சபையதார் ஸ்தபன மண்டபம் கட்டியது, கோயிற் பணியாளர்களுக்கு நிலங்கள் அளித்தமை, சுவாமியின் நைவேத்தியத்திற்கு நிலங்கள் விட்டது முதலியன தெரியவருகிறது. இலங்கையரசன் கயவாகு என்பவன் இப்பெருமானைத் தன் குலதெய்வமாகக் கொண்டு திருவிழாக்கள் செய்வித்த செய்தியும் கல்வெட்டால் தெரியவருகிறது. இக்கோயிலில் பல்லவர்களும் திருப்பணி செய்துள்ளனர் என்பதற்குச் சான்றாக சிம்மத் தூண்கள் உள்ளதைக் காணலாம்.

...திருசிற்றம்பலம்...
குறிப்பு

Add more details about this temple
Add more photos


More details about this temple given by user:
thillaisthanam