HolyIndia.Org
Holy India Org Add New Temple
கோயில் : 0048-திருவைகாவூர்
சிவஸ்தலம் பெயர் : திருவைகாவூர்
இறைவன் பெயர் : வில்வவனநாதர்
இறைவி பெயர் : சர்வஜனரட்சகி, வளைக்கை அம்மை
தல மரம் : வில்வம்
தீர்த்தம் : எமதீர்த்தம்
எப்படிப் போவது : கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை வழியாக நகரப் பேருந்து வசதிகள் திருவைகாவூர் செல்ல இருக்கின்றன.
சிவஸ்தலம் பெயர் : திருவைகாவூர்
மற்றவை தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி
உங்களிடமிருந்துதேவை இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும்
-தேவாரப் பதிகம் :- வழிபட்டோர்:-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் :
விவரம் அளிக்க இங்கே தட்டவும்
ஆலயம் பற்றி :

தல வரலாறு சிவராத்திரி நாளில் புலிக்குப் பயந்து வில்வ மரத்தின்மேல் ஏறியிருந்த வேடன் இரவெல்லாம் வில்வத்தைப் பறித்துப்போட்ட வண்ணம் தூங்காமல் இருக்க, காலையில் இறைவன் வெளிப்பட்டு அருள்புரிந்த அற்புதத் தலம். இங்கே நந்தி வாயிலை (கிழக்கு) நோக்கி திரும்பியிருப்பதைக் காணலாம். இத்தல வரலாறாகிய வேடன் நிகழ்ச்சி தொடர்பாக - அதாவது வேடனைப் பிடிக்க எமன்வர, நந்தியும், துவாரபாலகர்களும், ஏனையோரும் தடுக்க, மீறி வருமவனைத் தடுத்து விரட்ட இவ்வாறு திரும்பி இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் இக்கோயிலில் துவாரபாலகர்கள், நவக்கிரகங்கள் இல்லை எனப்படுகிறது. சிறப்புக்கள் சிவராத்திரிக்கு சிறப்புடைய தலம். இத்தலத்திற்கு வில்வவனம் என்றும் பெயருண்டு. உள்கோபுர வாயிலில் வேடன் நிகழ்ச்சி சுதையால் சித்தரிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் முருகன் வீற்றிருக்கும் மயிலின் முகம் திசை மாறியுள்ளது. துர்க்கைக்கு எதிரில் இரு சண்டேஸ்வரர் திருமேனிகள் உள்ளன. மூலவர் சுயம்பு மூர்த்தி . இத்தலத்தில் சிவராத்திரியன்று நான்காம் யாமத்தில் வேடன், வேடுவச்சி, இறைவன் காட்சி தரும் ஐதீகம் புறப்பாடு நடைபெறுகின்றன.

திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது ...திருசிற்றம்பலம்...
குறிப்பு

Add more details about this temple
Add more photos


More details about this temple given by user:
சீவபாரதி அவா;களே நீங்கள் அளித்த தகவல் ;மற்றும் வழிபடம் மிக பயன் உள்ளதாக உள்ளது உங்கள் உதவிக்கு நன்றி
Info ID :240 Name :சீவபாரதி Date :2010/03/19-02:07:00
clik to view route mapஇது கும்பகோணம் புகைவண்டி நிலையத்திலிருந்து திருவைகாவூர் வரையில் உள்ள சாலை மார்க்கம்.
Info ID :239 Name :Jeevabarathi Date :2010/03/17-09:02:17
திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது கோழைமிட றாககவி கோளுமில வாகஇசை கூடுவகையால் ஏழையடி யாரவர்கள் யாவைசொன சொன்மகிழும் ஈசனிடமாந் தாழையிள நீர்முதிய காய்கமுகின் வீழநிரை தாறுசிதறி வாழையுதிர் வீழ்கனிகள் ஊறிவயல் சேறுசெயும் வைகாவிலே. அண்டமுறு மேருவரை யங்கிகணை நாணரவ தாகஎழிலார் விண்டவர்த முப்புரமெ ரித்தவிகிர் தன்னவன் விரும்புமிடமாம் புண்டரிக மாமலர்கள் புக்குவிளை யாடுவயல் சூழ்தடமெலாம் வண்டினிசை பாடஅழ கார்குயில்மி ழற்றுபொழில் வைகாவிலே. ஊனமில ராகியுயர் நற்றவமெய் கற்றவையு ணர்ந்தஅடியார் ஞானமிக நின்றுதொழ நாளுமருள் செய்யவல நாதனிடமாம் ஆனவயல் சூழ்தருமல் சூழியரு கேபொழில்கள் தோறுமழகார் வானமதி யோடுமழை நீள்முகில்கள் வந்தணவும் வைகாவிலே. இன்னவுரு இன்னநிறம் என்றறிவ தேலரிது நீதிபலவுந் தன்னவுரு வாமெனமி குத்ததவன் நீதியொடு தானமர்விடம் முன்னைவினை போம்வகையி னால்முழு துணர்ந்துமுயல் கின்றமுனிவர் மன்னஇரு போதுமரு வித்தொழுது சேரும்வயல் வைகாவிலே. வேதமொடு வேள்விபல வாயினமி குத்துவிதி யாறுசமயம் ஓதியுமு ணர்ந்துமுள தேவர்தொழ நின்றருள்செ யொருவனிடமாம் மேதகைய கேதகைகள் புன்னையொடு ஞாழலவை மிக்கஅழகான் மாதவிம ணங்கமழ வண்டுபல பாடுபொழில் வைகாவிலே. நஞ்சமுது செய்தமணி கண்டன்நமை யாளுடைய ஞானமுதல்வன் செஞ்சடையி டைப்புனல் கரந்தசிவ லோகனமர் கின்றஇடமாம் அஞ்சுடரொ டாறுபத மேழின்இசை யெண்ணரிய வண்ணமுளதாய் மைஞ்சரொடு மாதர்பல ருந்தொழுது சேரும்வயல் வைகாவிலே. நாளுமிகு பாடலொடு ஞானமிகு நல்லமலர் வல்லவகையாற் தோளினொடு கைகுளிர வேதொழும வர்க்கருள்செய் சோதியிடமாம் நீளவளர் சோலைதொறும் நாளிபல துன்றுகனி நின்றதுதிர வாளைகுதி கொள்ளமது நாறமலர் விரியும்வயல் வைகாவிலே. கையிருப தோடுமெய்க லங்கிடவி லங்கலையெ டுத்தகடியோன் ஐயிருசி ரங்களையொ ருங்குடன் நெரித்தஅழ கன்றனிடமாங் கையின்மலர் கொண்டுநல காலையொடு மாலைகரு திப்பலவிதம் வையகமெ லாமருவி நின்றுதொழு தேத்துமெழில் வைகாவிலே. அந்தமுதல் ஆதிபெரு மானமரர் கோனையயன் மாலுமிவர்கள் எந்தைபெரு மான்இறைவன் என்றுதொழ நின்றருள்செ யீசனிடமாஞ் சிந்தைசெய்து பாடும்அடி யார்பொடிமெய் பூசியெழு தொண்டரவர்கள் வந்துபல சந்தமலர் முந்தியணை யும்பதிநல் வைகாவிலே. ஈசனெமை யாளுடைய எந்தைபெரு மானிறைவ னென்றுதனையே பேசுதல்செ யாவமணர் புத்தரவர் சித்தமணை யாவவனிடந் தேசமதெ லாமருவி நின்றுபர வித்திகழ நின்றபுகழோன் வாசமல ரானபல தூவியணை யும்பதிநல் வைகாவிலே. முற்றுநமை யாளுடைய முக்கண்முதல் வன்திருவை காவிலதனைச் செற்றமலி னார்சிரபு ரத்தலைவன் ஞானசம் பந்தனுரைசெய் உற்றதமிழ் மாலையீ ரைந்துமிவை வல்லவர் உருத்திரரெனப் பெற்றமர லோகமிக வாழ்வர்பிரி யாரவர்பெ ரும்புகழொடே. அருகில் உள்ள இரயில் நிலையம் கும்பகோணம் கும்பகோணத்திலிருந்து எண் 30, 12, 57 குறிப்பிட்ட பேருந்துகளில் செல்லலாம். 18 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை சென்று அங்கிருந்தும் செல்லலாம் (8 கி.மீ.). அல்லது கும்பகோணம்-தஞ்சாவூர் சாலை மார்க்கத்தில் திருவலஞ்சுழி என்ற இடத்தில் இறங்கி, அங்கிருந்து சுவாமிமலை மார்க்கமாகவும் செல்லலாம். வருடா வருடம் மாசி மாதம் சிவராத்திரி பண்டிகை மிகச் சிறப்பாக கொண்டடப்படுகிறது.
Info ID :47 Name :Jeevabharathi Date :2009/05/28-02:45:36
tiruvaikavur