| சிவஸ்தலம் பெயர் : | திருசேய்ஞலூர் (செங்கானூர்) |
| இறைவன் பெயர் : | சத்யகிரீஸ்வரர் |
| இறைவி பெயர் : | சகிதேவியம்மை |
| தீர்த்தம் : | மண்ணியாறு. (சத்திய புஷ்கரணி - குளம்) |
| வழிபட்டோர்: | சிபி, அரிச்சந்திரன் |
| எப்படிப் போவது : | கும்பகோணம் - அணைக்கரை பேருந்து மார்க்கத்தில் சென்று செங்கானூர் நிறுத்தத்தில் இறங்கி 1 Km நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம். |
| சிவஸ்தலம் பெயர் : | திருசேய்ஞலூர் (செங்கானூர்) |
| மற்றவை | தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி |
| உங்களிடமிருந்துதேவை | இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும் -தேவாரப் பதிகம் :-தல மரம் :-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் : விவரம் அளிக்க இங்கே தட்டவும் |
| ஆலயம் பற்றி : திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் தல வரலாறு மக்கள் வழக்கில் 'சேங்கலூர் ' என்று வழங்குகிறது. இத்தலச் சிறப்பைக் கந்தபுராணம், வழிநடைப்படலத்தில் பேசுகிறது. சூரனை அழிப்பதற்காக வந்த முருகப்பெருமான் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு, சர்வசங்காரப் படைக்கலத்தை - உருத்திர பாசுபதத்தைப் பெற்றார். சேய் - முருகன். சேய்க்கு நல்லதாக அமைந்த ஊராதலின் சேய் + நல் + ஊர் = சேய்ஞலூர் என்று பெயர் பெற்றது. சிறப்புக்கள் சண்டேசுவர நாயனாரின் அவதாரத் தலம். சத்தியகிரி, குமாரபுரி, சண்டேசுவரபுரம் என்ப வேறு பெயர். கோச் செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில், கோயில் 'கட்டுமலை' மேல் உள்ளது. கர்ப்பக்கிரகத்தைச் சுற்றிலும் மலைமேல் ஒரு பிராகாரமும், சுற்றிக் கீழே ஒரு பிராகாரமும் உள்ளன. சண்டேசுவரரின் திருமுடியில் பிறை, சடை, குண்டலம், கங்கையுள்ளன. நாயனாருக்கு காட்சித் தந்த சிறப்பைக் குறிக்கும் வகையில் இவ்வாறு அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். ...திருசிற்றம்பலம்... | |