| சிவஸ்தலம் பெயர் : | திருமண்ணிப்படிக்கரை |
| இறைவன் பெயர் : | நீலகண்டேசுவரர், |
| இறைவி பெயர் : | அமிர்தகரவல்லி, மங்களநாயகி |
| தல மரம் : | இலுப்பை |
| தீர்த்தம் : | பிரமதீர்த்தம், அமிர்ததீர்த்தம். |
| வழிபட்டோர்: | பாண்டவர்கள், பிரமன், மாந்தாதா, நளன் முதலியோர் |
| எப்படிப் போவது : | வைத்தீஸ்வரன் கோவில் சிவஸ்தலத்தில் இருந்து சாலை வழியாக மேற்கே 16 Km தொலைவில் கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் திருமண்ணிப்படிக்கரை சிவஸ்தலம் உள்ளது. தற்போது இலுப்பைப்பட்டு என்று வழங்குவதால் இலுப்பைப்பட்டு செல்லும் வழி எது என்று கேட்டுச் செல்ல வேண்டும். |
| சிவஸ்தலம் பெயர் : | திருமண்ணிப்படிக்கரை |
| மற்றவை | தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி |
| உங்களிடமிருந்துதேவை | இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும் -தேவாரப் பதிகம் :-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் : விவரம் அளிக்க இங்கே தட்டவும் |
| ஆலயம் பற்றி : சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய இப்பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது: தல வரலாறு மக்கள் வழக்கில் இலுப்பைப்பட்டு என்று வழங்குகிறது. இத்தலத்தருகே பண்டைக் காலத்தில் மண்ணியாறு ஓடியதால் 'பழ மண்ணிப் படிக்கரை ' என்றாயிற்றென்பர். இத்தலத்திற்கு மதூகவனம் என்றும் பெயர். (மதூகம் - இலுப்பை; பட்டு - ஊர்) ஒரு காலத்தில் இலுப்பை வனமாக இருந்ததாலும், இத்தல மரம் இலுப்பையாதலினும் இத்தலம் இப்பெயர் பெறலாயிற்று. இறைவன் விஷத்தைப் பருகியபோது உமாதேவி தன் கரத்தால் அவருடைய கழுத்தை ஸ்பரிசித்த தலம். பாண்டவர்கள் சித்திரைப் பௌர்ணமி நாளில் இங்கு வந்து பஞ்சலிங்கங்களையும் வழிபட்டதாக வரலாறு. பிரமனும் மாந்தாதாவும், நளனும் கூட, இங்கு வந்து வழிபட்டதாக தலவரலாறு கூறுகிறது. தருமர் வழிபட்டது நீலகண்டேஸ்வரர்; வீமன் வழிபட்டது மகதீஸ்வரர்; அருச்சுனன் வழிபட்டது படிக்கரைநாதர்; நகுலன் வழிபட்டது பரமேசர்; சகாதேவன் வழிபட்டது முத்தீசர் என்று சொல்லப்படுகிறது. திரௌபதி வழிபட்டது வலம்புரி விநாயகர் எனப்படுகிறது. ...திருசிற்றம்பலம்... | |