| சிவஸ்தலம் பெயர் : | திருகருப்பறியலூர் (தலைஞாயிறு) |
| இறைவன் பெயர் : | குற்றம் பொறுத்த நாதர் |
| இறைவி பெயர் : | கோல்வளைநாயகி, விசித்ர பாலாம்பிகை |
| தல மரம் : | கொடி முல்லை |
| தீர்த்தம் : | இந்திர தீர்த்தம் |
| வழிபட்டோர்: | வசிஷ்டர், ஆஞ்சநேயர், இந்திரன் |
| எப்படிப் போவது : | மயிலாடுதுறையில் இருந்து 14 Km தொலைவில் உள்ளது. |
| சிவஸ்தலம் பெயர் : | திருகருப்பறியலூர் (தலைஞாயிறு) |
| மற்றவை | தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி |
| உங்களிடமிருந்துதேவை | இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும் -தேவாரப் பதிகம் :-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் : விவரம் அளிக்க இங்கே தட்டவும் |
| ஆலயம் பற்றி : தல வரலாறு கொகுடி முல்லையைத் தலக்கொடியாக கொண்டதால் இப் பெயர் பெற்றது.(கருப்பறியலூர் என்பது ஊரின் பெயர். கோயிலின் பெயர் கொகுடிக்கோயில்). இறுமாப்புடன் இருந்த இந்திரன், முன் கயிலையில் இறைவர் பூத உருவத்துடன் தோன்றினார். அதனை அறியாத இந்திரன் வச்சிராயுதத்தை அவர் மேல் எறிந்தான். பின் தன் பிழையை உணர்ந்து பொறுக்கவேண்டியதால், இவ்வூர் இறைவன் பெயர் குற்றம் பொறுத்த நாதர் என்றாயிற்று, சிறப்புக்கள் இக்கோயிலில் சீர்காழி மலைக் கோயிலில் உள்ளது போல் அம்மையப்பரும், சட்டைநாதர் திருவுருவமும் உள்ளது, இதனை, மேலைக்காழி எனவும் கூறுவர். சோழர் காலக் கல்வெட்டுகள் உள்ளன. ...திருசிற்றம்பலம்... | |
திருத்தலச் சிறப்புகள்: பழ ஆறு என்பது விநாயக தீர்த்தம் ஆகும். வசிட்டர் அனுமன், இந்திரன் முதலியோர் வழிபட்ட தலம் இது. திருஞானசம்பந்தர் சுந்தரர் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலம். இத்தலம் மேலைக்காழி, தலைஞாயிறு என்று வழங்கப்படுகிறது. ஊரின் பெயர் கருப்பறியலூராக இருப்பினும், கோயில் பெயர் கொகுடிக்கோயில் என்று வழங்கப்படுகிறது. முல்லைக் கொடியை தலப்பெயராக கொண்டமையால் இப்பெயர் பெற்றது என்பர் சிலர்.
சூரியன் வழிபட்டதால் தலைஞாயிறு எனவும், சீர்காழிக்கு மேற்கில் உள்ளதால் மேலைக்காழி எனவும் பெயர் பெற்றது. சீர்காழியைப் போன்று மேல் தளத்தில் தோணியப்பர் அம்பிகையோடு எழுந்தருளியுள்ளார். அங்கிருந்து படியேறிச் சென்றால் சட்டைநாதர் சந்நிதியைத் தரிசிக்கலாம். இத்தலத்தில் விநாயகர், முருகர், உமாமகேசுவரர், நடராஜர் முதலிய சந்நிதிகள் உள்ளன.
இந்திரன் ஒருமுறை கயிலாயத்திற்கு இருமாப்புடன் சென்றார். அவர் முன் பூதவடிவில் இறைவன் தோன்றினார். அதை அறியாத இந்திரன் தனது வச்சிராயுதத்தை அவர்மீது எறிந்தார். அதன்பின் இறைவன் என்பதை அறிந்து தன் பிழை பொறுக்க வேண்டினார். அதை பொறுத்த காரணத்தினால் இறைவன் 'குற்றம்பொறுத்தநாதர்' என்று அழைக்கப்படுகிறார்.