| சிவஸ்தலம் பெயர் : | திருகுறுக்கை |
| இறைவன் பெயர் : | வீரட்டேஸ்வரர் |
| இறைவி பெயர் : | ஞானாம்பிகை |
| தல மரம் : | கடுக்கா |
| தீர்த்தம் : | சூல தீர்த்தம் |
| வழிபட்டோர்: | இலக்குமி, திருமால், பிரமன், முருகன், ரதி ஆகியோர் வழிபட்டத் தலம். |
| எப்படிப் போவது : | மயிலாடுதுறை - மணல்மேடு சாலையில் உள்ள கொண்டல் என்ற ஊரிலிருந்து 3 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. மயிலாடுதுறையில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் உண்டு. |
| சிவஸ்தலம் பெயர் : | திருகுறுக்கை |
| மற்றவை | தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி |
| உங்களிடமிருந்துதேவை | இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும் -தேவாரப் பதிகம் :-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் : விவரம் அளிக்க இங்கே தட்டவும் |
| ஆலயம் பற்றி :
திருக்குறுக்கை சிவபெருமானின் அட்டவீரட்டானத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம் மன்மதனை எரித்த தலம். சூரபன்மன், தாரகன் ஆகிய அசுரர்களின் தொல்லைகளை தீர்க்க சிவபெருமான் ஒரு குமாரனைத் தோன்றச் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் காரனமாக தேவர்கள் யோக நிலையில் இருக்கும் சிவபெருமானின் தவத்தைக் கலைக்க மன்மதனை அனுப்பினார்கள். மன்மதன் இறைவன் இருக்குமிடம் சென்று இறைவன் மீது காமபாணம் தொடுத்தான். காமன் தொடுத்த மலர்க்கணை இறைவனின் தவத்தை ஒரு கணம் சலனப்படுத்தியது. இறைவன் கோபமுற்று கண் திறந்து காமனைப் பார்க்க அவன் எரிந்து சாம்பலானான். மன்மதனின் மனைவி ரதி இறைவனிடம் அழுது கணவனின் பிழை பொறுத்தருள பிரார்த்தித்தாள். இறைவன் ரதியிடம் தான் பூலோகத்தில் பார்வதியை மணம் புரிந்து கொள்ளும் போது மன்மதனுக்கு சாபவிமோசனம் கிட்டும் என்று அருள் புரிந்தார். அருணகிரிநாதரின் திருப்புகழில் இத்தல முருகப்பெருமான் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு இருதேவியருடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். உற்சவர் வில்லேந்திய கோலத்தில் காட்சி தருகிறார். தலம் பெயர் வரலாறு: புராண காலத்தில் தீர்த்தவாகு என்ற முனிவர் சிவபெருமான் எழுந்தருளியுள்ள ஆலயங்களுக்குச் சென்று இறைவனுக்கு ஆகாய கங்கை நீரைக் கொண்டு அபிஷேகம் செய்யும் இயல்புடையவர். அவர் இத்தலத்தை அடைந்து அதுபோல் அபிஷேகம் செய்ய விரும்பி தன் நீண்ட கைகளை உயரத் தூக்க அவை குறுகின. அக்காரணத்தால் இத்தலத்தின் பெயர் குறுக்கை என்று வழங்கலாயிற்று. சிறப்புக்கள்
அமைவிடம்மாநிலம் : தமிழ் நாடு | |