| சிவஸ்தலம் பெயர் : | நீடூர் |
| இறைவன் பெயர் : | அருட்சோமநாதேஸ்வரர், கான நிர்த்தன சங்கரர் |
| இறைவி பெயர் : | வேயுறு தோளியம்மை, ஆலாலசுந்தர நாயகி |
| தல மரம் : | மகிழ மரம் |
| தீர்த்தம் : | செங்கழு நீரோடை, பத்திரகாளி தீர்த்தம், பருதிகுண்டம், வருண தீர்த்தம் |
| வழிபட்டோர்: | இந்திரன், சூரியன், காளி, நண்டு, சந்திரன் ஆகியோர் |
| எப்படிப் போவது : | மயிலாடுதுறையில் இருந்து 3 Km தொலைவில் உள்ளது. மயிலாடுதுறை - சிதம்பரம் ரயில் மார்க்கத்தில் நீடூர் ரயில் நிலையம் இருக்கிறது. |
| சிவஸ்தலம் பெயர் : | நீடூர் |
| மற்றவை | தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி |
| உங்களிடமிருந்துதேவை | இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும் -தேவாரப் பதிகம் :-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் : விவரம் அளிக்க இங்கே தட்டவும் |
| ஆலயம் பற்றி : கோவில் அமைப்பு: கிழக்கு திசையில் பிரதான வாயிலைக் கொண்ட இந்த ஆலயம் இரண்டு பிரகராங்களைக் கொண்டுள்ளது. இறைவியின் சந்நிதி வெளிப் பிரகாரத்தில் தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது. இறைவன் அருட்சோமநாதேஸ்வரர் சந்நிதி இரண்டாம் பிரகாரத்தில் உள்ளது. முருகர், சிவலோகநாதர், கைலாயநாதர், காசி விசுவநாதர் மற்றும் மகாலக்ஷ்மி ஆகியோரின் சந்நிதிகள் இரண்டாம் பிரகாரத்தில் இருக்கின்றன. கருவறையின் கோஷ்டங்களில் தட்சினாமூர்த்தி, பிரம்மா, அண்ணாமலையார், சண்டிகேஸ்வரர் மற்றும் துர்க்கை உருவங்கள் உள்ளன. தல வரலாறு: இத்தலத்தில் உள்ள சிவலிங்கம் தேவேந்திரனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மணலால் உருவாக்கப்பட்ட இந்த சிவலிங்கத்தை இந்திரன் பூஜித்ததாக ஐதீகம். சூரியன் மற்றும் சந்திரன் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டுள்ளனர். ...திருசிற்றம்பலம்... | |