| சிவஸ்தலம் பெயர் : | திருக்குருகாவூர் வெள்ளடை |
| இறைவன் பெயர் : | வெள்ளடையீசுவரர், சுவேத ரிஷபேஸ்வரர் |
| இறைவி பெயர் : | நீலோத்பவ விசாலாட்சி, காவியம் கன்னியம்மை |
| தீர்த்தம் : | பால் கிணறு |
| எப்படிப் போவது : | சீகாழியில் இருந்து தென்திருமுல்லைவாயில் செல்லும் சாலை மார்க்கத்தில் உள்ள வடகால் என்னும் இடத்தில் இறங்கி 1 Km நடந்து சென்றால் இந்த சிவஸ்தலத்தை அடையலாம். |
| சிவஸ்தலம் பெயர் : | திருக்குருகாவூர் வெள்ளடை |
| மற்றவை | தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி |
| உங்களிடமிருந்துதேவை | இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும் -தேவாரப் பதிகம் :-தல மரம் :- வழிபட்டோர்:-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் : விவரம் அளிக்க இங்கே தட்டவும் |
| ஆலயம் பற்றி : தல வரலாறு சோழநாட்டு காவிரி வடகரையில் இது 13வது தலமாகும். ஊர் = குருகாவூர்; கோயில் = வெள்ளடை. பசியோடிருந்த சுந்தரருக்கு இறைவன் கட்டமுதும், நீரும் தந்து பசியைப் போக்கியருளிய தலம். சிறப்புக்கள் தை அமாவாசை நாளில் இறைவன் தல தீர்த்தமான பால் கிணற்றில் எழுந்தருளி தீர்த்தம் கொடுப்பது சிறப்பானது. (சுந்தரருக்கு இறைவன் கட்டமுதும், நீரும் தந்து பசியப்போக்கி அற்புதம் நிகழ்த்திய இடம் "வரிசைப்பற்று" என்றும், "இடமணல்" என்றும் மக்களால் சொல்லப்படுகிறது. அவ்விடம் தென்திருமுல்லைவாயில் செல்லும் வழியில், இங்கிருந்து 1 கி. மீ. தொலைவில் உள்ளது; அவ்விடத்தில் சிவலிங்கம் ஒன்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கோயிலில் முதலாம் குலோத்துங்கன், முதலாம் இராசேந்திரன், விக்கிரமசோழன் ஆகியோர் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன. இத்தலத்து இறைவன் பெயரை வெள்ளடை மகாதேவர் என்றும், குருகாவூர் வெள்ளடையப்பன் என்றும் மேற்படி கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. மேலும், இக்கல்வெட்டுக்கல் கோயிலுக்கு நிபந்தங்கள் ஏற்படுத்திய செய்திகளைத் தெரிவிக்கின்றன. சீர்காழி - தென் திருமுல்லைவாயில் சாலையில், வடகால் என்னும் ஊரில், சாலையில் குருகாவூருக்கு பிரிந்து செல்லும் சாலையில் 1 கி. மீ. சென்றால் குருகாவூரை அடையலாம். தற்போது மக்கள் வழக்கில் திருக்கடாவூர் என்று வழங்குகிறது. ...திருசிற்றம்பலம்... | |