| சிவஸ்தலம் பெயர் : | திருபல்லவனீச்சுரம் |
| இறைவன் பெயர் : | பல்லவனேஸ்வரர் |
| இறைவி பெயர் : | சௌந்தரநாயகி |
| தல மரம் : | மல்லிகை, புன்னை (தற்போதில்லை) |
| தீர்த்தம் : | காவிரி,ஜான்னவி தீர்த்தம் |
| வழிபட்டோர்: | அகத்தியர், பல்லவ மன்னன் |
| எப்படிப் போவது : | சீர்காழிக்கு அருகில் உள்ள பூம்புகாரில் (காவிரிப்பூம்பட்டிணம்) இந்த சிவஸ்தலம் உள்ளது. சீர்காழி மற்றும் மயிலாடுதுறையில் இருந்து காவிரிப்பூம்பட்டிணம் செல்ல பேருந்து வசதிகள் இருக்கின்றன. |
| சிவஸ்தலம் பெயர் : | திருபல்லவனீச்சுரம் |
| மற்றவை | தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி |
| உங்களிடமிருந்துதேவை | இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும் -தேவாரப் பதிகம் :-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் : விவரம் அளிக்க இங்கே தட்டவும் |
| ஆலயம் பற்றி : தல வரலாறு இன்று காவிரிப்பூம்பட்டினம் - பூம்புகார் என்று வழங்கப்படுகிறது. கோயிலுக்கு எதிரில் அகத்தியர் உண்டாக்கிய ஜான்னவி தீர்த்தம் - திருக்குளம் உள்ளது. சிறப்புக்கள் பட்டினத்தார், இயற்பகை நாயனார் ஆகியோரின் அவதாரப் பதி. சிலப்பதிகாரக் காப்பியம் தொடங்குவது இத்தலத்தில்தான். வெளிமண்டபத்தில் தலப்பதிக கல்வெட்டு உள்ளது. மாறவர்மன்திருபுவனச் சக்ரவர்த்தி சுந்தரபாண்டியனது 17-ஆம் ஆட்சியாண்டில் இராஜாதி ராஜ வளநாட்டுக் காவிரிப்பூம்பட்டினத்துக் கோயிலுக்கு நிலம் வழங்கியதையும் மற்றும் சாலி வாகனசகம். கலி 4775 சகம் 1670 (கி. பி. 1757) ஜய வருடம் ராயரவுத்த மிண்ட நாயனார் முதலியோர் திருச்சாய்க்காட்டுச்சீனம், காவிரிப்பூம்பட்டினம் மாகாணம் பல்லவனீச்சரக் கோயிலுக்குத் திருப்பணிக்கும் வழிபாட்டிற்கும் நிலம் வழங்கிய செய்தியை இங்குள்ள இரு வெவ்வேறு கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. உள் மண்டபத்தில் தில்லையமைப்பில் அமைந்துள்ள சபாபதி சபை தரிசிக்கத்தக்கது. ஆடி மாதத்தில் பட்டினத்தாருக்கு பன்னிரு நாள்கள் திருவிழா எடுக்கிறார்கள். ...திருசிற்றம்பலம்... | |