HolyIndia.Org
Holy India Org Add New Temple
கோயில் : 0001-சிதம்பரம்
சிவஸ்தலம் பெயர் : சிதம்பரம்
இறைவன் பெயர் : கனகசபை - சபாநாயகர், திருமூலட்டானம் - திருமூலநாதர்
இறைவி பெயர் : கனகசபை - சிவகாமி, திருமூலட்டானம் - உமையம்மை
தல மரம் : தில்லைமரம் - தற்போது பிச்சாவரம் பகுதியில் உள்ளது
தீர்த்தம் : கொள்ளிடம்
வழிபட்டோர்: அனைத்து சைவர்களும்
எப்படிப் போவது : சென்னையில் இருந்து ரயில் மற்றும் சாலை மார்க்கமாக சிதம்பரம் சென்று அடையலாம். சென்னையில் இருந்து சுமார் 240 Km தொலைவில் சிதம்பரம் இருக்கிறது. காவிரியின் வடகரை சிவஸ்தலங்களை தரிசிக்க சிதம்பரத்தை ஒரு நுழைவாயில் என்று கூட சொல்லலாம்.
விழாக்கள் : தேர் தரிசனம்
நிர்வாகம் : தீட்சதர்கள்
கட்டியது புதம்
கட்டிய ஆண்டு கணக்கில்லை
கிராமம்/நகரம் சிதம்பரம்
மாவட்டம் : கடலுர்
மாநிலம் : தமிழ்நாடு
சிவஸ்தலம் பெயர் : சிதம்பரம்
பேருந்து நிறுத்தம் : சிதம்பரம்
தொடர்வண்டி நிலையம் : சிதம்பரம்
மற்றவை தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி
உங்களிடமிருந்துதேவை இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும்
-தேவாரப் பதிகம் :-சிறப்புகள் : -மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -விமான நிலையம் :
விவரம் அளிக்க இங்கே தட்டவும்
ஆலயம் பற்றி :
 • பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம்
 • தரிசிக்க முக்தி தரும் தலம்
 • பஞ்ச சபைகளில் பொற்சபையாக விளங்கும் தலம்
 • ஆதாரத் தலங்களில் இருதய தலமாக விளங்கும் தலம்
 • அம்பாள் இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தியாக்க் காட்சி தரும் தலம்
 • நடு இரவுக்குப் பின் அனைத்து லிங்கங்களின் சக்தியும் வந்து சேரும் திருமூலட்டானத் தலம்
 • சைவர்களுக்கு கோவில் என்று அறியப்படும் தலம்

இத்தகைய பெருமைகளைப் பெற்றிருக்கும் தலம் தான் சிதம்பரம். இந்த சிதம்பரம் கோவில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. கருங்கற்களால கட்டப்பட்ட மதிற்சுவர்களுடனும், விண்ணை முட்டும் நான்கு இராஜ கோபுரங்களுடனும் நன்கு அமைந்திருக்கிறது. கோவில் கோபுரத்து மாடங்களில் எண்ணற்ற முனிவர்கள், தேவர்கள் சிற்பங்கள் காணப்படுகின்றன. கிழக்கு மேற்கு கோபுரங்களில் 108 நடன பாவங்களையும் அறிவிக்கும் சிறபங்கள் அழகிய முறையில் அமைக்கப்பட்டுள்ளன. சமயக்குரவர் என்று போற்றப்படும் அப்பர், சம்பந்தர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் ஒவ்வொரு வாயில் வழியாக தில்லை சிதம்பரம் கோவிலுக்குள் எழுந்தருளினர் என்று வரலாறு கூறுகிறது. மேற்குக் கோபுர வாயில் வழியாக திருநாவுக்கரசரும், தெற்குக் கோபுர வாயில் வழியாக திருஞானசம்பந்தரும், வடக்கு கோபுர வாயில் வழியாக சுந்தரரும், கிழக்குக் கோபுர வாயில் வழியாக மாணிக்கவாசகரும் வந்து தில்லைச் சிற்றம்பலத்திலுள்ள சிவபெருமானை வழிபட்டுள்ளனர்.

தில்லை சிதம்பரத்தில் திருமூலட்டானத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவன் திருப்பெயர் மூலட்டானேஸ்வரர் (திருமூலநாதர்). அர்த்தசாம வழிபாடு முடிந்தவுடன் எல்லக் கோவில்களிலுமுள்ள சிவகலைகள் அனைத்தும் இந்த மூலத்தான லிங்கத்தில் ஒடுங்குவதால் இந்த பெயர் அமைந்தது. திருமூலட்டானத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவி திருப்பெயர் உமையம்மை.

நடராஜப் பெருமானுக்கு உள்ள திருச்சபைகள் ஐந்தில் சிதம்பரம் தலம் கனகசபையாகும். மற்றவை 1) திருவாலங்காடு - இரத்தினசபை, 2) மதுரை - வெள்ளிசபை, 3) திருநெல்வேலி - தாமிரசபை, 4) திருக்குற்றாலம் - சித்திரசபை.

இவையன்றி தில்லை சிதம்பரத்தில் உள்ள நடராஜப் பெருமானுக்கு இக்கோவிலேயே ஐந்து சபைகள் இருக்கின்றன. அவை முறையே சிற்சபை (சிற்றம்பலம்), 2) கனகசபை, 3) இராசசபை, 4) தேவசபை, 5) நிருத்தசபை ஆகியவையாகும். இவற்றுள்

 1. சிற்சபை (சிற்றம்பலம்) நடராஜப் பெருமான் திருநடனம் புரிந்தருளும் இடமாகும். முதலாம் ஆதித்த சோழனுடைய மகன் முதல் பராந்தக சோழன் இச்சிற்றம்பலத்திற்கு பொன் வேய்ந்தான் என்று செப்பேடுகள் கூறுகின்றன.
 2. கனகசபை (பொன்னம்பலம்) சிற்றம்பலத்திற்கு முன் அமைந்துள்ளது. இங்கு ஸ்படிக லிங்கத்திற்கு நாள்தோறும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது.
 3. இராசசபை என்பது ஆயிரங்கால் மண்டபம். ஆண்டுதோறும் ஆனி, மார்கழி மாதங்களில் நடைபெறும் ஒன்பதாம் நாள் திருவிழாக்களில் நடராஜப் பெருமான் இரவில் இம்மண்டபத்தில் எழுந்தருளி மறுநாள் காலை பக்தர்களுக்கு தரிசனம் தருவார்.
 4. தேவசபை பேரம்பலம் என்று அழைக்கப்படுகிறது. இதன் விமானம் செம்பினால் வேயப்பட்டுள்ளது.
 5. நிருத்தசபை நடராஜப் பெருமானின் கொடிமரத்திற்குத் தென்புறம் மிகவும் அற்புதமான வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது. ஊர்த்துவ பெருமானின் திருமேனி இங்கு உள்ளது.

மூன்றாம் பிரகாரத்தில் சிவகங்கை திருக்குளத்திற்கு மேற்கே அம்பிகை சிவகாமசுந்தரியின் சந்நிதி ஒரு தனிக்கோவிலாக பிரகாரத்துடன் அமைந்து விளங்குகிறது. கோவிலின் வடமேற்குத் திசையில் அம்பிகை சிவகாமசுந்தரி கோவிலை ஒட்டியும், வடக்கு கோபுரத்தை ஒட்டியும் முருகன் கோவில் அமைந்து விளங்குகிறது. ஆறுமுகப் பெருமான் வள்ளி தெய்வயானை இருபக்கமும் நிற்க மயிலின் மீது எழுந்தருளி காட்சி தருகிறார். முருகனின் திரு உருவம் ஒரே கல்லினால் அமைந்ததாகும்.

சைவ, வைணவ சமய ஒற்றுமைக்கு சிதம்பரம் கோவில் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான திருசித்திரக்கூடம் என்று அழைக்கப்படும் கோவிந்தராஜப் பெருமாள் கோவில் தில்லை சிதம்பரம் கோவிலின் உள்ளே அமைந்திருக்கிறது. நடராஜப் பெருமானின் சந்நிதிக்கு நேர் எதிரே நின்றுகொண்டு நடராஜரை தரிசனம் செய்தபிறகு இடதுபுறம் திரும்பி நின்றால் கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியைக் காணலாம். இரண்டு சந்நிதிகளும் அருகருகே அமைந்திருப்பது தில்லை கோவிலின் சிறப்பாகும்.

...திருசிற்றம்பலம்...
குறிப்பு

Add more details about this temple
Add more photos


More details about this temple given by user:
This is nice temple builded by cholas and god
Info ID :167 Name :sen Date :2009/10/18-13:37:25
clik to view photoThis is called vel
Info ID :126 Name :sen Date :2009/08/06-04:47:21

சிற்சபை (சிற்றம்பலம்) நடராஜப் பெருமான் திருநடனம் புரிந்தருளும் இடமாகும். முதலாம் ஆதித்த சோழனுடைய மகன் முதல் பராந்தக சோழன் இச்சிற்றம்பலத்திற்கு பொன் வேய்ந்தான் என்று செப்பேடுகள் கூறுகின்றன.கனகசபை (பொன்னம்பலம்) சிற்றம்பலத்திற்கு முன் அமைந்துள்ளது. இங்கு ஸ்படிக லிங்கத்திற்கு நாள்தோறும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது.இராசசபை என்பது ஆயிரங்கால் மண்டபம். ஆண்டுதோறும் ஆனி, மார்கழி மாதங்களில் நடைபெறும் ஒன்பதாம் நாள் திருவிழாக்களில் நடராஜப் பெருமான் இரவில் இம்மண்டபத்தில் எழுந்தருளி மறுநாள் காலை பக்தர்களுக்கு தரிசனம் தருவார்.தேவசபை பேரம்பலம் என்று அழைக்கப்படுகிறது. இதன் விமானம் செம்பினால் வேயப்பட்டுள்ளது.நிருத்தசபை நடராஜப் பெருமானின் கொடிமரத்திற்குத் தென்புறம் மிகவும் அற்புதமான வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது. ஊர்த்துவ பெருமானின் திருமேனி இங்கு உள்ளது.FROM THE IP ADDRESS :125.16.159.73 DATE:2008/04/07-08:16:22

FROM THE IP ADDRESS :125.16.159.73 DATE:2008/04/07-08:30:19

சென்னை மார்ச்-4. சிதம்பரம் நடராஜர் ஆலையத்தில் தேவார திருமுறைகளை ஓதி வழிபட விரும்பும் பக்தர்கள் அனைவரும் கட்டணம் ஏதும் செலுத்திடாமல் வழிபடலாம் என்றும், இதனை தீட்சிதர்கள் உள்ளிட்ட யாரும் தடுத்திட்டால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த ஆலயத்தில் தேவாரம் திருவாசகம் பாடி தாய் தமிழ் மொழியில் வழிபடுவதற்கு அரசுச் செயலாளர் உத்தரவிடலாம் என்று உயர்நீதிமன்றம் ஆணையிட்டதைத் தொடர்ந்து, அதை பாடி வழிபட ஆலயத்திற்குள் சென்ற ஓதுவார்கள் உள்ளிட்ட பக்தர்கள் தீட்சிதர்களால் தடுக்கப்பட்டு, அமளி உருவானதை சுட்டிக்காட்டியுள்ளது இந்த அறிக்கை.FROM THE IP ADDRESS :125.16.159.73 DATE:2008/04/12-06:49:13

சிதம்பரம் கோயில் இந்த உலகில் மிகமிக புனிதமான இடம் அதை சிலர் (மற்றமதத்தினர்) தனது சொந்த இலாபத்துக்காக ஆதாயம் தேடுகிறார்கள்

FROM THE IP ADDRESS :125.16.159.73 DATE:2008/04/12-06:53:54

The Chidambaram Temple (Tamil: சிதம்பரம் கோயில் ), dedicated to Lord Shiva (or Siva) in His form of the Cosmic Dancer, Nataraja நடராசர், is a temple complex spread over 40 acres in the heart of the city. It is an ancient and historic temple dedicated to Lord Shiva Nataraja and Lord Govindaraja Perumal, one of the few temples where both the Shaivite and Vaishnavite deities are enshrined in one place. The origins of this ancient temple are buried in the past. It is one of the few example of Dravidian architectural and sculptural styles built up over the centuries including that built by the Cholas.

To the follower of Shaivism or Saivism, (the saivaite), the very word ‘Koil ’ Tamil: கோயில்) or Temple refers to the Chidambaram temple. In the same way, to the followers of Vaishnavism (the religion followed by the devotees of Lord Vishnu) it refers to Srirangam or Thiruvaramgam.The word Chidambaram may be derived from ‘Chit’, meaning ‘consciousness,’ and ‘ambaram’, meaning sky (aakasam or aakayam); thus it refers to the \'chidakasam\', the sky of consciousness, which is the ultimate aim one should attain as mentioned by all vedas and scriptures. Another theory is it is derived from \'chitrambalam\' (chit + ambalam). \'Ambalam\' means Stage for performing arts. The \'chidakasam\' is the state of supreme bliss or \'aananda\' and lord Natarajar is the symbolic representation of the supreme bliss or \'aananda natanam\'. Saivaites believe that a visit to Chidambaram leads to liberation. Yet another theory is it is derieved from thae word \'chitrambalam\'(Chithu+ambalam), Chithu meaning \'play or dance of god\' and \'Ambalam\' meaning stage performing art.

One of the special features of this temple is the bejeweled image of Nataraja. It depicts the Lord Shiva as the Lord of the dance Bharatanatyam and is one of the few temples where Shiva is represented by an idol rather than a Lingam.The Cosmic Dance of Lord Nataraja symbolises the motion of the universe is sustained by Lord Shiva. The temple has five courts.

Aragalur utaya Iraratevan Ponparappinan alias Vanakovaraiyan rebuilt the Siva temple at Chidambaram around 1213 AD. The same Bana Chief also built Tiruvannamalai temple.

Inside the premises, only qualified persons are permitted to recite the vedas and mantras in Sanskrit, and no outsider or recitation in any other language, including Tamil, is entertained. This, currently, is a subject of great controversy. The temple belongs to the Deekshitars.

In 2008, the much controversial case of singing \'Devaram\' has been completed and the court has provided the judgement as \"Tamil Devaram could be sung within the temple premises.\". Following this judgement, the tamil saivaites have started singing Devaram (with considerable opposition from Deekshitars) within the temple premises.The Legend of Chidambaram and its significance

The LegendThe story of Chidambaram begins with the legend of Lord Siva strolling into the Thillai Vanam தில்லைவனம் (\'Vanam\' meaning forest and \'thillai\' trees - botanical name Exocoeria agallocha, a species of mangrove trees - which currently grows in the Pichavaram wetlands near Chidambaram. The temple sculptures depicting the Thillai trees date back to the 2nd century AD).

The subjugation of ignorance

FROM THE IP ADDRESS :193.110.102.2 DATE:2008/10/30-01:54:36

All siva devoties has worshiped this temple god

FROM THE IP ADDRESS :193.110.102.2 DATE:2008/11/23-04:04:46

Nice temple to see

FROM THE IP ADDRESS :118.95.15.164 DATE:2009/07/31-22:17:20
Info ID :102 Name :senthamilTOholyindia Date :2009/08/01-04:16:04
clik to view phototESTDDDDDDDDDDDD
Info ID :65 Name :SEN Date :2009/07/31-14:21:23
clik to view route mapChidambaram sirkali mayavaram poompuhar route map
Info ID :43 Name :sen Date :2009/03/30-14:19:30
clik to view route mapchidambaram map
Info ID :42 Name :sen Date :2009/03/30-14:09:07
clik to view photoசிதம்பரம் கோயில் - திருவேட்களம் கோயில் சிவபுரி கனகாம்காள் பைரவர் கோயில்கள் குறியுடன்
Info ID :25 Name :செந்தில் Date :2009/03/23-15:39:32
clik to view photoசிதம்பரம் கோயில் - திருவேட்களம் கோயில் சிவபுரி கனகாம்காள் பைரவர் கோயில்கள்
Info ID :24 Name :செந்தில் Date :2009/03/23-15:38:34
clik to view photoசிதம்பரம் கோயில் ஆகாயத்திலிருந்து தோற்றம்
Info ID :22 Name :செந்தில் Date :2009/03/23-15:09:01
clik to view photoசிதம்பரத்திலிருந்து திருகயிலாயம் வரை அனைத்து தேவார பதிகளும் ஈழம் உட்பட
Info ID :21 Name :செந்தில் Date :2009/03/23-14:07:13
clik to view photoUlmight god nataraj dancing
Info ID :10 Name :sen Date :2009/02/18-13:41:22
chidambaram