HolyIndia.Org
Holy India Org Add New Temple

தேவாரம்பாடல்எண்[1-8250*] கோயில் : [1-275] வார்த்தைதேடல்

1-7/7347
மலையார் அருவித் திரள்மா மணியுந்திக் 
குலையாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபாற் 
கலையார் அல்குற்கன் னியராடுந் துறைய[ர்த் 
தலைவா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.

2-7/7348
மத்தம் மதயானை யின்வெண் மருப்புந்தி 
முத்தங் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபாற் 
பத்தர் பயின்றேத்திப் பரவுந் துறைய[ர் 
அத்தா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.

3-7/7349
கந்தங் கமழ்கா ரகில்சந் தனமுந்திச் 
செந்தண் புனல்வந் திழிபெண்ணை வடபால் 
மந்தி பலமா நடமாடுந் துறைய[ர் 
எந்தாய் உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.

4-7/7350
அரும்பார்ந் தனமல் லிகைசண் பகஞ்சாடிச் 
சுரும்பாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால் 
கரும்பார் மொழிக்கன் னியராடுந் துறைய[ர் 
விரும்பா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.

5-7/7351
பாடார்ந் தனமாவும் பலாக்க ளுஞ்சாடி 
நாடார வந்தெற்றி யோர்பெண்ணை வடபால் 
மாடார்ந் தனமாளி கைசூழுந் துறைய[ர் 
வேடா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.

6-7/7352
மட்டார் மலர்க்கொன் றையும்வன்னி யுஞ்சாடி 
மொட்டாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால் 
கொட்டாட் டொடுபாட் டொலியோவாத் துறைய[ர்ச் 
சிட்டா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.

7-7/7353
மாதார் மயிற்பீலி யும்வெண் ணுரையுந்தித் 
தாதாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால் 
போதார்ந் தனபொய்கை கள்சூழுந் துறைய[ர் 
நாதா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.

8-7/7354
கொய்யா மலர்க்கோங் கொடுவேங்கை யுஞ்சாடிச் 
செய்யாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால் 
மையார் தடங்கண் ணியராடுந் துறைய[ர் 
ஐயா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.

9-7/7355
விண்ணார்ந் தனமேகங் கள்நின்று பொழிய 
மண்ணாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால் 
பண்ணார் மொழிப்பா வையராடுந் துறைய[ர் 
அண்ணா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.

10-7/7356
மாவாய்ப் பிளந்தானும் மலர்மிசை யானும் 
ஆவா அவர்தேடித் திரிந்தல மந்தார் 
பூவார்ந் தனபொய்கை கள்சூழுந் துறைய[ர்த் 
தேவா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.

11-7/7357
செய்யார் கமல மலர்நாவ லூர்மன்னன் 
கையாற் றொழுதேத்தப் படுந்துறை ய[ர்மேற் 
பொய்யாத் தமி|ரன் உரைத்தன வல்லார் 
மெய்யே பெறுவார்கள் தவநெறி தானே.
Thiruvidaivoi