HolyIndia.Org
Holy India Org Add New Temple

தேவாரம்பாடல்எண்[1-8250*] கோயில் : [1-275] வார்த்தைதேடல்

1-2/1764
தொண்டெ லாமலர் தூவி யேத்தநஞ்
சுண்ட லாருயி ராய தன்மையர்
கண்ட னார்கரு வு[ரு ளானிலை
அண்ட னாரரு ளீயும் அன்பரே.

2-2/1765
நீதி யார்நினைந் தாய நான்மறை
ஓதி யாரொடுங் கூட லார்குழைக்
காதி னார்கரு வு[ரு ளானிலை
ஆதி யாரடி யார்தம் அன்பரே.

3-2/1766
விண்ணு லாமதி சூடி வேதமே
பண்ணு ளார்பர மாய பண்பினர்
கண்ணு ளார்கரு வு[ரு ளானிலை
அண்ண லாரடி யார்க்கு நல்லரே.

4-2/1767
முடியர் மும்மத யானை யீருரி
பொடியர் பூங்கணை வேளைச் செற்றவர்
கடியு ளார்கரு வு[ரு ளானிலை
அடிகள் யாவையு மாய ஈசரே.

5-2/1768
பங்க யம்மலர்ப் பாதர் பாதியோர்
மங்கை யர்மணி நீல கண்டர்வான்
கங்கை யர்கரு வு[ரு ளானிலை
அங்கை யாடர வத்தெம் மண்ணலே.

6-2/1769
தேவர் திங்களும் பாம்புஞ் சென்னியில்
மேவர் மும்மதி லெய்த வில்லியர்
காவ லர்கரு வு[ரு ளானிலை
மூவ ராகிய மொய்ம்ப ரல்லரே.

7-2/1770
பண்ணி னார்படி யேற்றர் நீற்றர்மெய்ப்
பெண்ணி னார்பிறை தாங்கு நெற்றியர்
கண்ணி னார்கரு வு[ரு ளானிலை
நண்ணி னார்நமை யாளும் நாதரே.

8-2/1771
கடுத்த வாளரக் கன்க யிலையை
எடுத்த வன்றலை தோளுந் தாளினால்
அடர்த்த வன்கரு வு[ரு ளானிலை
கொடுத்த வன்னருள் கூத்த னல்லனே.

9-2/1772
உழுது மாநிலத் தேன மாகிமால்
தொழுது மாமல ரோனுங் காண்கிலார்
கழுதி னான்கரு வு[ரு ளானிலை
முழுது மாகிய மூர்த்தி பாதமே.

10-2/1773
புத்தர் புன்சம ணாதர் பொய்யுரைப்
பித்தர் பேசிய பேச்சை விட்டுமெய்ப்
பத்தர் சேர்கரு வு[ரு ளானிலை
அத்தர் பாதம் அடைந்து வாழ்மினே.

11-2/1774
கந்த மார்பொழிற் காழி ஞானசம்
பந்தன் சேர்கரு வு[ரு ளானிலை
எந்தை யைச்சொன்ன பத்தும் வல்லவர்
சிந்தை யிற்றுய ராய தீர்வரே.
Thiruvidaivoi