HolyIndia.Org
Holy India Org Add New Temple

தேவாரம்பாடல்எண்[1-8250*] கோயில் : [1-275] வார்த்தைதேடல்

1-3/4111
பூங்கொடி மடவாள் உமையொரு பாகம் புரிதரு சடைமுடி யடிகள்
வீங்கிருள் நட்டம் ஆடுமெம் விகிர்தர் விருப்பொடும் உறைவிடம் வினவில்
தேங்கமழ் பொழிலிற் செழுமலர் கோதிச் செறிதரு வண்டிசை பாடும்
ஓங்கிய புகழார் ஓமமாம் புலிய[ர் உடையவர் வடதளி யதுவே.

2-3/4112
சம்பரற் கருளிச் சலந்தரன் வீயத் தழலுமிழ் சக்கரம் படைத்த
எம்பெரு மானார் இமையவ ரேத்த இனிதினங் குறைவிடம் வினவில்
அம்பர மாகி அழலுமிழ் புகையின் ஆகுதி யான்மழை பொழியும்
உம்பர்க ளேத்தும் ஓமமாம் புலிய[ர் உடையவர் வடதளி யதுவே.

3-3/4113
பாங்குடைத் தவத்துப் பகீரதற் கருளிப் படர்சடைக் கரந்தநீர்க் கங்கை
தாங்குதல் தவிர்த்துத் தராதலத் திழித்த தத்துவன் உறைவிடம் வினவில்
ஆங்கெரி மூன்றும் அமர்ந்துட னிருந்த அங்கையால் ஆகுதி வேட்கும்
ஓங்கிய மறையோர் ஓமமாம் புலிய[ர் உடையவர் வடதளி யதுவே.

4-3/4114
புற்றர வணிந்து நீறுமெய் பூசிப் பூதங்கள் சூழ்தர வு[ரூர்
பெற்றமொன் றேறிப் பெய்பலி கொள்ளும் பிரானவன் உறைவிடம் வினவிற்
கற்றநால் வேதம் அங்கமோ ராறுங் கருத்தினார் அருத்தியாற் றெரியும்
உற்றபல் புகழார் ஓமமாம் புலிய[ர் உடையவர் வடதளி யதுவே.

5-3/4115
நிலத்தவர் வானம் ஆள்பவர் கீழோர் துயர்கெட நெடியமாற் கருளால்
அலைத்தவல் லசுரர் ஆசற வாழி யளித்தவன் உறைவிடம் வினவிற்
சலத்தினாற் பொருள்கள் வேண்டுதல் செய்யாத் தன்மையார் நன்மையான் மிக்க
உலப்பில்பல் புகழார் ஓமமாம் புலிய[ர் உடையவர் வடதளி யதுவே.

6-3/4116
மணந்திகழ் திசைகள் எட்டும் ஏழிசையும் மலியுமா றங்கம் ஐவேள்வி
இணைந்தநால் வேதம் மூன்றெரி யிரண்டு பிறப்பென வொருமையா லுணருங்
குணங்களும் அவற்றின் கொள்பொருள் குற்றம் மற்றவை யுற்றது மெல்லாம்
உணர்ந்தவர் வாழும் ஓமமாம் புலிய[ர் உடையவர் வடதளி யதுவே.

7-3/4117
தலையொரு பத்துந் தடக்கைய திரட்டி தானுடை அரக்க னொண்கயிலை
அலைவது செய்த அவன்றிறல் கெடுத்த ஆதியார் உறைவிடம் வினவில்
மலையென வோங்கும் மாளிகை நிலவும் மாமதில் மாற்றல ரென்றும்
உலவுபல் புகழார் ஓமமாம் புலிய[ர் உடையவர் வடதளி யதுவே.

8-3/4118
கள்ளவிழ் மலர்மே லிருந்தவன் கரியோ னென்றிவர் காண்பரி தாய
ஒள்ளெரி யுருவர் உமையவ ளோடும் உகந்தினி துறைவிடம் வினவிற்
பள்ளநீர் வாளை பாய்தரு கழனி பனிமலர்ச் சோலைசூ ழாலை
ஒள்ளிய புகழார் ஓமமாம் புலிய[ர் உடையவர் வடதளி யதுவே.

9-3/4119
தௌ;ளிய ரல்லாத் தேரரோ டமணர் தடுக்கொடு சீவரம் உடுக்குங்
கள்ளமார் மனத்துக் கலதிகட் கருளாக் கடவுளார் உறைவிடம் வினவில்
நள்ளிருள் யாமம் நான்மறை தெரிந்து நலந்திகழ் மூன்றெரி யோம்பும்
ஒள்ளியார் வாழும் ஓமமாம் புலிய[ர் உடையவர் வடதளி யதுவே.

10-3/4120
விளைதரு வயலுள் வெயில்செறி பவளம் மேதிகள் மேய்புலத் திடறி
ஒளிதர மல்கும் ஓமமாம் புலிய[ர் உடையவர் வடதளி யரனைக்
களிதரு நிவப்பிற் காண்டகு செல்வக் காழியுள் ஞானசம் பந்தன்
அளிதரு பாடல் பத்தும்வல் லார்கள் அமரலோ கத்திருப் பாரே.

11-6/7112
ஆராரும் மூவிலைவேல் அங்கை யானை
அலைகடல்நஞ் சயின்றானை அமர ரேத்தும்
ஏராரும் மதிபொதியுஞ் சடையி னானை
எழுபிறப்பும் எனையாளா வுடையான் றன்னை
ஊராரும் படநாக மாட்டு வானை
உயர்புகழ்சேர் தருமோமாம் புலிய[ர் மன்னுஞ்
சீராரும் வடதளியெஞ் செல்வன் றன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

12-6/7113
ஆதியான் அரிஅயனென் றறிய வொண்ணா
அமரர்தொழுங் கழலானை அமலன் றன்னைச்
சோதிமதி கலைதொலையத் தக்க னெச்சன்
சுடரிரவி அயிலெயிறு தொலைவித் தானை
ஓதிமிக அந்தணர்கள் எரிமூன் றோம்பும்
உயர்புகழார் தருமோமாம் புலிய[ர் மன்னுந்
தீதிற்றிரு வடதளியெஞ் செல்வன் றன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

13-6/7114
வருமிக்க மதயானை யுரித்தான் றன்னை
வானவர்கோன் தோளனைத்தும் மடிவித் தானைத்
தருமிக்க குழலுமையாள் பாகன் றன்னைச்
சங்கரனெம் பெருமானைத் தரணி தன்மேல்
உருமிக்க மணிமாடம் நிலாவு வீதி
உத்தமர்வாழ் தருமோமாம் புலிய[ர் மன்னுந்
திருமிக்க வடதளியெஞ் செல்வன் றன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

14-6/7115
அன்றினவர் புரமூன்றும் பொடியாய் வேவ
அழல்விழித்த கண்ணானை அமரர் கோனை
வென்றிமிகு காலனுயிர் பொன்றி வீழ
விளங்குதிரு வடியெடுத்த விகிர்தன் றன்னை
ஒன்றியசீர் இருபிறப்பர் முத்தீ யோம்பும்
உயர்புகழ்நான் மறையோமாம் புலிய[ர் நாளுந்
தென்றல்மலி வடதளியெஞ் செல்வன் றன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

15-6/7116
பாங்குடைய எழிலங்கி யருச்சனைமுன் விரும்பப்
பரிந்தவனுக் கருள்செய்த பரமன் றன்னைப்
பாங்கிலா நரகதனிற் தொண்ட ரானார்
பாராத வகைபண்ண வல்லான் றன்னை
ஓங்குமதிற் புடைதழுவும் எழிலோமாம் புலிய[ர்
உயர்புகழந் தணரேத்த வுலகர்க் கென்றுந்
தீங்கில்திரு வடதளியெஞ் செல்வன் றன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

16-6/7117
அருந்தவத்தோர் தொழுதேத்தும் அம்மான் றன்னை
ஆராத இன்னமுதை அடியார் தம்மேல்
வருந்துயரந் தவிர்ப்பானை உமையாள் நங்கை
மணவாள நம்பியையென் மருந்து தன்னைப்
பொருந்துபுனல் தழுவுவயல் நிலவு துங்கப்
பொழில்கெழுவு தருமோமாம் புலிய[ர் நாளுந்
திருந்துதிரு வடதளியெஞ் செல்வன் றன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

17-6/7118
மலையானை வருமலையன் றுரிசெய் தானை
மறையானை மறையாலும் அறிய வொண்ணாக்
கலையானைக் கலையாருங் கையி னானைக்
கடிவானை அடியார்கள் துயர மெல்லாம்
உலையாத அந்தணர்கள் வாழு மோமாம்
புலிய[ரெம் உத்தமனைப் புரமூன் றெய்த
சிலையானை வடதளியெஞ் செல்வன் றன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

18-6/7119
சேர்ந்தோடு மணிக்கங்கை சூடி னானைச்
செழுமதியும் படஅரவும் உடன்வைத் தானைச்
சார்ந்தோர்கட் கினியானைத் தன்னொப் பில்லாத்
தழலுருவைத் தலைமகனைத் தகைநால் வேதம்
ஓர்ந்தோதிப் பயில்வார்வாழ் தருமோமாம் புலிய[ர்
உள்ளானைக் கள்ளாத அடியார் நெஞ்சிற்
சேர்ந்தானை வடதளியெஞ் செல்வன் றன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

19-6/7120
வார்கெழுவு முலையுமையாள் வெருவ வன்று
மலையெடுத்த வாளரக்கன் றோளுந் தாளும்
ஏர்கெழுவு சிரம்பத்தும் இறுத்து மீண்டே
இன்னிசைகேட் டிருந்தானை இமையோர் கோனைப்
பார்கெழுவு புகழ்மறையோர் பயிலும் மாடப்
பைம்பொழில்சேர் தருமோமாம் புலிய[ர் மன்னுஞ்
சீர்கெழுவு வடதளியெஞ் செல்வன் றன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

20-7/7628
வள்வாய மதிமிளிரும் வளர்சடையி னானை 
மறையவனை வாய்மொழியை வானவர்தங் கோனைப் 
புள்வாயைக் கீண்டுலகம் விழுங்கியுமிழ்ந் தானைப் 
பொன்னிறத்தின் முப்புரிநுல் நான்முகத்தி னானை 
முள்வாய மடல்தழுவி முடத்தாழை ஈன்று 
மொட்டலர்ந்து விரைநாறும் முருகுவிரி பொழில்சூழ் 
கள்வாய கருங்குவளை கண்வளருங் கழனிக் 
கானாட்டு முள்@ரிற் கண்டுதொழு தேனே.

21-7/7629
ஒருமேக முகிலாகி ஒத்துலகந் தானாய் 
ஊர்வனவும் நிற்பனவும் ஊழிகளுந் தானாய்ப் 
பொருமேவு கடலாகிப் பூதங்கள் ஐந்தாய்ப் 
புனைந்தவனைப் புண்ணியனைப் புரிசடையி னானைத் 
திருமேவு செல்வத்தார் தீமூன்றும் வளர்த்த 
திருத்தக்க அந்தணர்கள் ஓதுநக ரெங்குங் 
கருமேதி செந்தாம ரைமேயுங் கழனிக் 
கானாட்டு முள்@ரிற் கண்டுதொழு தேனே.

22-7/7630
இரும்புயர்ந்த மூவிலைய சூலத்தி னானை 
இறையவனை மறையவனை எண்குணத்தி னானைச் 
சுரும்புயர்ந்த கொன்றையொடு தூமதியஞ் சூடுஞ் 
சடையானை விடையானைச் சோதியெனுஞ் சுடரை 
அரும்புயர்ந்த அரவிந்தத் தணிமலர்க ளேறி 
அன்னங்கள் விளையாடும் அகன்றுறையின் அருகே 
கரும்புயர்ந்து பெருஞ்செந்நெல் நெருங்கிவிளை கழனிக் 
கானாட்டு முள்@ரிற் கண்டுதொழு தேனே.

23-7/7631
பூளைபுனை கொன்றையொடு புரிசடையி னானைப் 
புனலாகி அனலாகிப் பூதங்கள் ஐந்தாய் 
நாளைஇன்று நெருநலாய் ஆகாய மாகி 
ஞாயிறாய் மதியமாய் நின்றவெம் பரனைப் 
பாளைபடு பைங்கமுகின் சூழலிளந் தெங்கின் 
படுமதஞ்செய் கொழுந்தேறல் வாய்மடுத்துப் பருகிக் 
காளைவண்டு பாடமயில் ஆலும்வளர் சோலைக் 
கானாட்டு முள்@ரிற் கண்டுதொழு தேனே.

24-7/7632
செருக்குவாய்ப் பைங்கண்வெள் ளரவரையி னானைத் 
தேவர்கள்சூ ளாமணியைச் செங்கண்விடை யானை 
முருக்குவாய் மலரொக்குந் திருமேனி யானை 
முன்னிலையாய் முழுதுலக மாயபெரு மானை 
இருக்குவாய் அந்தணர்கள் எழுபிறப்பு ளெங்கும் 
வேள்வியிருந் திருநிதியம் வழங்குநக ரெங்கும் 
கருக்குவாய்ப் பெண்ணையொடு தெங்குமலி சோலைக் 
கானாட்டு முள்@ரிற் கண்டுதொழு தேனே.

25-7/7633
விடையரவக் கொடியேந்தும் விண்ணவர்தங் கோனை 
வெள்ளத்து மாலவனும் வேதமுத லானும் 
அடியிணையுந் திருமுடியுங் காணவரி தாய 
சங்கரனைத் தத்துவனைத் தையல்மட வார்கள் 
உடையவிழக் குழலவிழக் கோதைகுடைந் தாடக் 
குங்குமங்கள் உந்திவரு கொள்ளிடத்தின் கரைமேற் 
கடைகள்விடு வார்குவளை களைவாருங் கழனிக் 
கானாட்டு முள்@ரிற் கண்டுதொழு தேனே.

26-7/7634
அருமணியை முத்தினை ஆனஞ்சும் ஆடும் 
அமரர்கள்தம் பெருமானை அருமறையின் பொருளைத் 
திருமணியைத் தீங்கரும்பின் ஊறலிருந் தேனைத் 
தெரிவரிய மாமணியைத் திகழ்தருசெம் பொன்னைக் 
குருமணிகள் கொழித்திழிந்து சுழித்திழியுந் திரைவாய்க் 
கோல்வளையார் குடைந்தாடுங் கொள்ளிடத்தின் கரைமேற் 
கருமணிகள் போல்நீலம் மலர்கின்ற கழனிக் 
கானாட்டு முள்@ரிற் கண்டுதொழு தேனே.

27-7/7635
இழைதழுவு வெண்ணூலும் மேவுதிரு மார்பின் 
ஈசன்றன் எண்டோ ள்கள் வீசியெரி யாடக் 
குழைதழுவு திருக்காதிற் கோளரவ மசைத்துக் 
கோவணங்கொள் குழகனைக் குளிர்சடையி னானைத் 
தழைதழுவு தண்ணிறத்த செந்நெலதன் அயலே 
தடந்தரள மென்கரும்பின் தாழ்கிடங்கி னருகே 
கழைதழுவித் தேன்றொடுக்குங் கழனிசூழ் பழனக் 
கானாட்டு முள்@ரிற் கண்டுதொழு தேனே.

28-7/7636
குனிவினிய கதிர்மதியஞ் சூடுசடை யானைக் 
குண்டலஞ்சேர் காதவனை வண்டினங்கள் பாடப் 
பனியுதிருஞ் சடையானைப் பால்வெண்ணீற் றானைப் 
பலவுருவுந் தன்னுருவே ஆயபெரு மானைத் 
துனிவினிய தூயமொழித் தொண்டைவாய் நல்லார் 
தூநீலங் கண்வளருஞ் சூழ்கிடங்கி னருகே 
கனிவினிய கதலிவனந் தழுவுபொழிற் சோலைக் 
கானாட்டு முள்@ரிற் கண்டுதொழு தேனே.

29-7/7637
தேவியம்பொன் மலைக்கோமன் றன்பாவை யாகத் 
தனதுருவம் ஒருபாகஞ் சேர்த்துவித்த பெருமான் 
மேவியவெந் நரகத்தில் அழுந்தாமை நமக்கு 
மெய்ந்நெறியைத் தான்காட்டும் வேதமுத லானைத் 
தூவிவாய் நாரையொடு குருகுபாய்ந் தார்ப்பத் 
துறைக்கெண்டை மிளிர்ந்துகயல் துள்ளிவிளை யாடக் 
காவிவாய் வண்டுபல பண்செய்யுங் கழனிக் 
கானாட்டு முள்@ரிற் கண்டுதொழு தேனே.

30-7/7638
திரையினார் கடல்சூழ்ந்த தென்னிலங்கைக் கோனைச் 
செற்றவனைச் செஞ்சடைமேல் வெண்மதியி னானைக் 
கரையினார் புனல்தழுவு கொள்ளிடத்தின் கரைமேற் 
கானாட்டு முள்@ரிற் கண்டுகழல் தொழுது 
உரையினார் மதயானை நாவலா ரூரன் 
உரிமையால் உரைசெய்த ஒண்டமிழ்கள் வல்லார் 
வரையினார் வகைஞாலம் ஆண்டவர்க்குந் தாம்போய் 
வானவர்க்குந் தலைவராய் நிற்பரவர் தாமே.
Thiruvidaivoi