HolyIndia.Org
Holy India Org Add New Temple

தேவாரம்பாடல்எண்[1-8250*] கோயில் : [1-275] வார்த்தைதேடல்

1-7/7256
தலைக்குத் தலைமாலை அணிந்த தென்னே 
சடைமேற்கங் கைவெள்ளந் தரித்த தென்னே 
அலைக்கும் புலித்தோல்கொண் டசைத்த தென்னே 
அதன்மேற் கதநாகக் கச்சார்த்த தென்னே 
மலைக்குந் நிகரொப் பனவன் றிரைகள் 
வலித்தெற் றிமுழங் கிவலம் புரிகொண் 
டலைக்குங் கடலங் கரைமேல் மகோதை 
அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.

2-7/7257
பிடித்தாட்டி யோர்நாகத் தைப்பூண்ட தென்னே 
பிறங்குஞ் சடைமேற் பிறைசூடிற் றென்னே 
பொடித்தான்கொண் டுமெய்ம்முற் றும்பூசிற் றென்னே 
புகரே றுகந்தேறல் புரிந்த தென்னே 
மடித்தோட் டந்துவன் றிரையெற் றியிட 
வளர்சங்கம் அங்காந்து முத்தஞ் சொரிய 
அடித்தார் கடலங் கரைமேன் மகோதை 
அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.

3-7/7258
சிந்தித் தெழுவார்க்கு நெல்லிக் கனியே 
சிறியார் பெரியார் மனத்தேற லுற்றால் 
முந்தித் தொழுவார் இறவார் பிறவார் 
முனிகள் முனியே அமரர்க் கமரா 
சந்தித் தடமால் வரைபோற் றிரைகள் 
தணியா திடறுங் கடலங் கரைமேல் 
அந்தித் தலைச்செக்கர் வானே ஒத்தியால் 
அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.

4-7/7259
இழைக்கு மெழுத்துக் குயிரே ஒத்தியால் 
இலையே ஒத்தியால் இணையே ஒத்தியாற் 
குழைக்கும் பயிர்க்கோர் புயலே ஒத்தியால் 
அடியார் தமக்கோர் குடியே ஒத்தியால் 
மழைக்குந் நிகரொப் பனவன் றிரைகள் 
வலித்தெற் றிமுழங் கிவலம் புரிகொண் 
டழைக்குங் கடலங் கரைமேல் மகோதை 
அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.

5-7/7260
வீடின் பயனென் பிறப்பின் பயனென் 
விடையே றுவதென் மதயா னைநிற்க 
கூடும் மலைமங் கைஒருத் தியுடன் 
சடைமேற் கங்கையாளை நீசூடிற் றென்னே 
பாடும் புலவர்க் கருளும் பொருளென் 
நிதியம் பலசெய் தகலச் செலவில் 
ஆடுங் கடலங் கரைமேல் மகோதை 
அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.

6-7/7261
இரவத் திடுகாட் டெரியாடிற் றென்னே 
இறந்தார் தலையிற் பலிகோட லென்னே 
பரவித் தொழுவார் பெறுபண்ட மென்னே 
பரமா பரமேட் டிபணித் தருளாய் 
உரவத் தொடுசங்க மோடிப்பி முத்தங் 
கொணர்ந்தெற் றிமுழங் கிவலம் புரிகொண் 
டரவக் கடலங் கரைமேல் மகோதை 
அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.

7-7/7262
ஆக்கு மழிவு மமைவும்நீ யென்பன்நான் 
சொல்லுவார் சொற்பொரு ளவைநீ யென்பன்நான் 
நாக்குஞ் செவியுங் கண்ணும்நீ யென்பன்நான் 
நலனே இனிநான் உனைநன் குணர்ந்தேன் 
நோக்கும் நிதியம் பலவெத் தனையுங் 
கலத்திற் புகப்பெய்து கொண்டேற நுந்தி 
ஆர்க்குங் கடலங் கரைமேல் மகோதை 
அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.

8-7/7263
வெறுத்தேன் மனைவாழ்க் கையைவிட் டொழிந்தேன் 
விளங்குங் குழைக்கா துடைவே தியனே 
இறுத்தாய் இலங்கைக் கிறையா யவனைத் 
தலைபத் தொடுதோள் பலஇற் றுவிழக் 
கறுத்தாய் கடல்நஞ் சமுதுண்டு கண்டங் 
கடுகப் பிரமன் றலையைந் திலுமொன் 
றறுத்தாய் கடலங் கரைமேல் மகோதை 
அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.

9-7/7264
பிடிக்குக் களிறே ஒத்தியா லெம்பிரான் 
பிரமற் கும்பிரான் மற்றைமாற் கும்பிரான் 
நொடிக்கும் அளவிற் புரமூன் றெரியச் 
சிலைதொட் டவனே உனைநான் மறவேன் 
வடிக்கின் றனபோற் சிலவன் றிரைகள் 
வலித்தெற் றிமுழங் கிவலம் புரிகொண் 
டடிக்குங் கடலங் கரைமேல் மகோதை 
அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.

10-7/7265
எந்தம் அடிகள் இமையோர் பெருமான் 
எனக்கென் றும்அளிக் கும்மணி மிடற்றன் 
அந்தண் கடலங் கரைமேல் மகோதை 
அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனை 
மந்தம் முழவுங் குழலு மியம்பும் 
வளர்நா வலர்கோன் நம்பிய[ ரன்சொன்ன 
சந்தம் மிகுதண் டமிழ்மாலை கள்கொண் 
டடிவீழ வல்லார் தடுமாற் றிலரே.

11-7/8157
எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெரு மானையே
உற்றாயென் றுன்னையே உள்குகின் றேனுணர்ந் துள்ளத்தாற்
புற்றா டரவா புக்கொளி ய[ரவி நாசியே
பற்றாக வாழ்வேன் பசுபதி யேபர மேட்டியே.

12-7/8158
வழிபோவார் தம்மோடும் வந்துடன் கூடிய மாணிநீ
ஒழிவ தழகோ சொல்லாய் அருளோங்கு சடையானே
பொழிலாருஞ் சோலைப் புக்கொளி ய[ரிற் குளத்திடை
இழியாக் குளித்த மாணியெ னைக்கிறி செய்ததே.

13-7/8159
எங்கேனும் போகினும் எம்பெரு மானை நினைந்தக்காற்
கொங்கே புகினுங் கூறைகொண் டாறலைப் பாரிலை
பொங்கா டரவா புக்கொளி ய[ரவி நாசியே
எங்கோ னேயுனை வேண்டிக்கொள் வேன்பிற வாமையே.

14-7/8160
உரைப்பார் உரையுகந் துள்கவல் லார்தங்கள் உச்சியாய்
அரைக்கா டரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளி ய[ரவி நாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே.

15-7/8161
அரங்காவ தெல்லா மாயிடு காடது வன்றியுஞ்
சரங்கோலை வாங்கி வரிசிலை நாணியிற் சந்தித்துப்
புரங்கோட எய்தாய் புக்கொளி ய[ரவி நாசியே
குரங்காடு சோலைக் கோயில்கொண் டகுழைக் காதனே.

16-7/8162
நாத்தா னும்உனைப் பாடலன் றிநவி லாதெனாச்
சோத்தென்று தேவர் தொழநின்ற சுந்தரச் சோதியாய்
பூத்தாழ் சடையாய் புக்கொளி ய[ரவி நாசியே
கூத்தா உனக்குநான் ஆட்பட்ட குற்றமுங் குற்றமே.

17-7/8163
மந்தி கடுவனுக் குண்பழம் நாடி மலைப்புறஞ்
சந்திகள் தோறுஞ் சலபுட்பம் இட்டு வழிபடப்
புந்தி உறைவாய் புக்கொளி ய[ரவி நாசியே
நந்தி உனைவேண்டிக் கொள்வேன் நரகம் புகாமையே.

18-7/8164
பேணா தொழிந்தேன் உன்னைய லாற்பிற தேவரைக்
காணா தொழிந்தேன் காட்டுதி யேலின்னங் காண்பன்நான்
பூணாண் அரவா புக்கொளி ய[ரவி நாசியே
காணாத கண்கள் காட்டவல் லகறைக் கண்டனே.

19-7/8165
நள்ளாறு தௌ;ளா றரத்துறை வாய்எங்கள் நம்பனே
வெள்ளாடை வேண்டாய் வேங்கையின் தோலை விரும்பினாய்
புள்ளேறு சோலைப் புக்கொளி ய[ரிற் குளத்திடை
உள்ளாடப் புக்க மாணியென் னைக்கிறி செய்ததே.

20-7/8166
நீரேற ஏறுநிமிர் புன்சடை நின்மல மூர்த்தியைப்
போரேற தேறியைப் புக்கொளி ய[ரவி நாசியைக்
காரேறு கண்டனைத் தொண்டன் ஆரூரன் கருதிய
சீரேறு பாடல்கள் செப்பவல் லார்க்கில்லை துன்பமே.
Thiruvidaivoi