HolyIndia.Org
Holy India Org Add New Temple

தேவாரம்பாடல்எண்[1-8250*] கோயில் : [1-275] வார்த்தைதேடல்

1-3/2878
சடையுடை யானும்நெய் யாடலா னுஞ்சரி கோவண 
உடையுடை யானுமை ஆர்ந்தவொண் கண்ணுமை கேள்வனுங் 
கடையுடை நன்னெடு மாடமோங் குங்கட வு[ர்தனுள் 
விடையுடை யண்ணலும் வீரட்டா னத்தர னல்லனே.

2-3/2879
எரிதரு வார்சடை யானும்வெள் ளையெரு தேறியும் 
புரிதரு மாமலர்க் கொன்றைமா லைபுனைந் தேத்தவே 
கரிதரு காலனைச் சாடினா னுங்கட வு[ர்தனுள் 
விரிதரு தொல்புகழ் வீரட்டா னத்தர னல்லனே.

3-3/2880
நாதனுந் நள்ளிரு ளாடினா னுந்நளிர் போதின்கண் 
பாதனும் பாய்புலித் தோலினா னும்பசு வேறியுங் 
காதலர் தண்கட வு[ரினா னுங்கலந் தேத்தவே 
வேதம தோதியும் வீரட்டா னத்தர னல்லனே.

4-3/2881
மழுவமர் செல்வனும் மாசிலா தபல பூதமுன் 
முழவொலி யாழ்குழல் மொந்தைகொட் டம்முது காட்டிடைக் 
கழல்வளர் கால்குஞ்சித் தாடினா னுங்கட வு[ர்தனுள் 
விழவொலி மல்கிய வீரட்டா னத்தர னல்லனே.

5-3/2882
சுடர்மணிச் சுண்ணவெண் ணீற்றினா னுஞ்சுழல் வாயதோர் 
படமணி நாகம் அரைக்கசைத் தபர மேட்டியுங் 
கடமணி மாவுரித் தோலினா னுங்கட வு[ர்தனுள் 
விடமணி கண்டனும் வீரட்டா னத்தர னல்லனே.

6-3/2883
பண்பொலி நான்மறை பாடியா டிப்பல வு[ர்கள்போய் 
உண்பலி கொண்டுழல் வானும்வா னின்னொளி மல்கிய 
கண்பொலி நெற்றிவெண் டிங்களா னுங்கட வு[ர்தனுள் 
வெண்பொடிப் பூசியும் வீரட்டா னத்தர னல்லனே.

7-3/2884
செவ்வழ லாய்நில னாகிநின் றசிவ மூர்த்தியும் 
முவ்வழல் நான்மறை யைந்துமா யமுனி கேள்வனுங் 
கவ்வழல் வாய்க்கத நாகமார்த் தான்கட வு[ர்தனுள் 
வௌ;வழ லேந்துகை வீரட்டா னத்தர னல்லனே.

8-3/2885
அடியிரண் டோ ருடம் பைஞ்ஞான் கிருபது தோள்தச 
முடியுடை வேந்தனை மூர்க்கழித் தமுதல் மூர்த்தியுங் 
கடிகம ழும்பொழில் சூழுமந் தண்கட வு[ர்தனுள் 
வெடிதலை யேந்தியும் வீரட்டா னத்தர னல்லனே.

9-3/2886
வரைகுடை யாமழை தாங்கினா னும்வளர் போதின்கண் 
புரைகடிந் தோங்கிய நான்முகத் தான்புரிந் தேத்தவே 
கரைகடல் சூழ்வையங் காக்கின்றா னுங்கட வு[ர்தனுள் 
விரைகமழ் பூம்பொழில் வீரட்டா னத்தர னல்லனே.

10-3/2887
தேரரும் மாசுகொள் மேனியா ருந்தெளி யாததோர் 
ஆரருஞ் சொற்பொரு ளாகிநின் றஎம தாதியான் 
காரிளங் கொன்றைவெண் டிங்களா னுங்கட வு[ர்தனுள் 
வீரமுஞ் சேர்கழல் வீரட்டா னத்தர னல்லனே.

11-3/2888
வெந்தவெண் ணீறணி வீரட்டா னத்துறை வேந்தனை 
அந்தணர் தங்கட வு[ருளா னையணி காழியான் 
சந்தமெல் லாமடிச் சாத்தவல் லமறை ஞானசம் 
பந்தன செந்தமிழ் பாடியா டக்கெடும் பாவமே.

12-4/4462
பொள்ளத்த காய மாயப் 
பொருளினைப் போக மாதர் 
வெள்ளத்தைக் கழிக்க வேண்டில் 
விரும்புமின் விளக்குத் தூபம் 
உள்ளத்த திரியொன் றேற்றி 
உணருமா றுணர வல்லார் 
கள்ளத்தைக் கழிப்பர் போலுங் 
கடவு[ர்வீ ரட்ட னாரே.

13-4/4463
மண்ணிடைக் குரம்பை தன்னை 
மதித்துநீர் மைய லெய்தில் 
விண்ணிடைத் தரும ராசன் 
வேண்டினால் விலக்கு வாரார் 
பண்ணிடைச் சுவைகள் பாடி 
ஆடிடும் பத்தர்க் கென்றுங் 
கண்ணிடை மணியர் போலுங் 
கடவு[ர்வீ ரட்ட னாரே.

14-4/4464
பொருத்திய குரம்பை தன்னுட் 
பொய்நடை செலுத்து கின்றீர் 
ஒருத்தனை யுணர மாட்டீர் 
உள்ளத்திற் கொடுமை நீக்கீர் 
வருத்தின களிறு தன்னை 
வருத்துமா வருத்த வல்லார் 
கருத்தினில் இருப்பர் போலுங் 
கடவு[ர்வீ ரட்ட னாரே.

15-4/4465
பெரும்புலர் காலை மூழ்கிப் 
பித்தற்குப் பத்த ராகி 
அரும்பொடு மலர்கள் கொண்டாங் 
கார்வத்தை யுள்ளே வைத்து 
விரும்பிநல் விளக்குத் தூபம் 
விதியினால் இடவல் லார்க்குக் 
கரும்பினிற் கட்டி போல்வார் 
கடவு[ர்வீ ரட்ட னாரே.

16-4/4466
தலக்கமே செய்து வாழ்ந்து 
தக்கவா றொன்று மின்றி 
விலக்குவா ரிலாமை யாலே 
விளக்கதிற் கோழி போன்றேன் 
மலக்குவார் மனத்தி னுள்ளே 
காலனார் தமர்கள் வந்து 
கலக்கநான் கலங்கு கின்றேன் 
கடவு[ர்வீ ரட்ட னாரே.

17-4/4467
பழியுடை யாக்கை தன்னிற் 
பாழுக்கே நீரி றைத்து 
வழியிடை வாழ மாட்டேன் 
மாயமுந் தெளிய கில்லேன் 
அழிவுடைத் தாய வாழ்க்கை 
ஐவரால் அலைக்கப் பட்டுக் 
கழியிடைத் தோணி போன்றேன் 
கடவு[ர்வீ ரட்ட னாரே.

18-4/4468
மாயத்தை அறிய மாட்டேன் 
மையல்கொள் மனத்த னாகிப் 
பேயொத்துக் கூகை யானேன் 
பிஞ்ஞகா பிறப்பொன் றில்லீ 
நேயத்தால் நினைய மாட்டேன் 
நீதனே நீசனேன் நான் 
காயத்தைக் கழிக்க மாட்டேன் 
கடவு[ர்வீ ரட்ட னாரே.

19-4/4469
பற்றிலா வாழ்க்கை வாழ்ந்து 
பாழுக்கே நீரி றைத்தேன் 
உற்றலாற் கயவர் தேறா 
ரென்னுங்கட் டுரையோ டொத்தேன் 
எற்றுளேன் என்செய் கேன்நான் 
இடும்பையால் ஞான மேதுங் 
கற்றிலேன் களைகண் காணேன் 
கடவு[ர்வீ ரட்ட னாரே.

20-4/4470
சேலின்நேர் அனைய கண்ணார் 
திறம்விட்டுச் சிவனுக் கன்பாய்ப் 
பாலுநற் றயிர்நெய் யோடு 
பலபல ஆட்டி யென்றும் 
மாலினைத் தவிர நின்ற 
மார்க்கண்டற் காக வன்று 
காலனை யுதைப்பர் போலுங் 
கடவு[ர்வீ ரட்ட னாரே.

21-4/4471
முந்துரு இருவ ரோடு 
மூவரு மாயி னாரும் 
இந்திர னோடு தேவர் 
இருடிகள் இன்பஞ் செய்ய 
வந்திரு பதுகள் தோளால் 
எடுத்தவன் வலியை வாட்டிக் 
கந்திரு வங்கள் கேட்டார் 
கடவு[ர்வீ ரட்ட னாரே.

22-4/5171
நெய்தற் குருகுதன் பிள்ளையென் 
றெண்ணி நெருங்கிச்சென்று 
கைதை மடற்புல்கு தென்கழிப் 
பாலை யதனுறைவாய் 
பைதற் பிறையொடு பாம்புடன் 
வைத்த பரிசறியோம் 
எய்தப் பெறின்இரங் காதுகண் 
டாய்நம் மிறையவனே.

23-4/5172
பருமா மணியும் பவளமுத் 
தும்பரந் துந்திவரை 
பொருமால் கரைமேற் றிரைகொணர்ந் 
தெற்றப் பொலிந்திலங்குங் 
கருமா மிடறுடைக் கண்டனெம் 
மான்கழிப் பாலையெந்தை 
பெருமா னவனென்னை யாளுடை 
யானிப் பெருநிலத்தே.

24-4/5173
நாட்பட் டிருந்தின்பம் எய்தலுற் 
றிங்கு நமன்தமராற் 
கோட்பட் டொழிவதன் முந்துற 
வேகுளி ரார்தடத்துத் 
தாட்பட்ட தாமரைப் பொய்கையந் 
தண்கழிப் பாலையண்ணற் 
காட்பட் டொழிந்தவன் றேவல்ல 
மாயிவ் வகலிடத்தே.

25-4/5174
மருட்டுயர் தீரவன் றர்ச்சித்த 
மாணிமார்க் கண்டேயற்காய் 
இருட்டிய மேனி வளைவாள் 
எயிற்றெரி போலுங்குஞ்சிச் 
சுருட்டிய நாவில்வெங் கூற்றம் 
பதைப்ப வுதைத்துங்ஙனே 
உருட்டிய சேவடி யான்கட 
வு[ருறை உத்தமனே.

26-4/5175
பதத்தெழு மந்திரம் அஞ்செழுத் 
தோதிப் பரிவினொடும் 
இதத்தெழு மாணிதன் இன்னுயிர் 
உண்ண வெகுண்டடர்த்த 
கதத்தெழு காலனைக் கண்குரு 
திப்புன லாறொழுக 
உதைத்தெழு சேவடி யான்கட 
வு[ருறை உத்தமனே.

27-4/5176
கரப்புறு சிந்தையர் காண்டற் 
கரியவன் காமனையும் 
நெருப்புமிழ் கண்ணினன் நீள்புனற் 
கங்கையும் பொங்கரவும் 
பரப்பிய செஞ்சடைப் பால்வண்ணன் 
காலனைப் பண்டொருகால் 
உரப்பிய சேவடி யான்கட 
வு[ருறை உத்தமனே.

28-4/5177
மறித்திகழ் கையினன் வானவர் 
கோனை மனமகிழ்ந்து 
குறித்தெழு மாணிதன் ஆருயிர் 
கொள்வான் கொதித்தசிந்தைக் 
கறுத்தெழு மூவிலை வேலுடைக் 
காலனைத் தானலற 
உறுக்கிய சேவடி யான்கட 
வு[ருறை உத்தமனே.

29-4/5178
குழைத்திகழ் காதினன் வானவர் 
கோனைக் குளிர்ந்தெழுந்து 
பழக்கமோ டர்ச்சித்த மாணிதன் 
ஆருயிர் கொள்ளவந்த 
தழற்பொதி மூவிலை வேலுடைக் 
காலனைத் தானலற 
உழக்கிய சேவடி யான்கட 
வு[ருறை உத்தமனே.

30-4/5179
பாலனுக் காயன்று பாற்கடல் 
ஈந்து பணைத்தெழுந்த 
ஆலினிற் கீழிருந் தாரண 
மோதி அருமுனிக்காய்ச் 
சூலமும் பாசமுங் கொண்டு 
தொடர்ந்தடர்ந் தோடிவந்த 
காலனைக் காய்ந்த பிரான்கட 
வு[ருறை உத்தமனே.

31-4/5180
படர்சடைக் கொன்றையும் பன்னக 
மாலை பணிகயிறா 
உடைதலைக் கோத்துழல் மேனியன் 
உண்பலிக் கென்றுழல்வோன் 
சுடர்பொதி மூவிலை வேலுடைக் 
காலனைத் துண்டமதா 
உடறிய சேவடி யான்கட 
வு[ருறை உத்தமனே.

32-4/5181
வெண்டலை மாலையுங் கங்கைக் 
கரோடி விரிசடைமேற் 
பெண்டனி நாயகன் பேயுகந் 
தாடும் பெருந்தகையான் 
கண்டனி நெற்றியன் காலனைக் 
காய்ந்து கடலின்விடம் 
உண்டருள் செய்தபி ரான்கட 
வு[ருறை உத்தமனே.

33-4/5182
கேழல தாகிக் கிளறிய 
கேசவன் காண்பரிதாய் 
வாழிநன் மாமலர்க் கண்ணிடந் 
திட்டவம் மாலவற்கன் 
றாழியும் ஈந்து அடுதிறற் 
காலனை அன்றடர்த்து 
ஊழியு மாய பிரான்கட 
வு[ருறை உத்தமனே.

34-4/5183
தேன்றிகழ் கொன்றையுங் கூவிள 
மாலை திருமுடிமேல் 
ஆன்றிகழ் ஐந்துகந் தாடும் 
பிரான்மலை ஆர்த்தெடுத்த 
கூன்றிகழ் வாளரக் கன்முடி 
பத்துங் குலைந்துவிழ 
ஊன்றிய சேவடி யான்கட 
வு[ருறை உத்தமனே.

35-5/5596
மலைக்கொ ளானை மயக்கிய வல்வினை
நிலைக்கொ ளானை நினைப்புறு நெஞ்சமே
கொலைக்கை யானையுங் கொன்றிடு மாதலாற்
கலைக்கை யானைகண் டீர்கட வு[ரரே.

36-5/5597
வெள்ளி மால்வரை போல்வதோ ரானையார்
உள்ள வாறெனை உள்புகு மானையார்
கொள்ள மாகிய கோயிலு ளானையார்
கள்ள வானைகண் டீர்கட வு[ரரே.

37-5/5598
ஞான மாகிய நன்குண ரானையார்
ஊனை வேவ வுருக்கிய ஆனையார்
வேன லானை யுரித்துமை அஞ்சவே
கான லானைகண் டீர்கட வு[ரரே.

38-5/5599
ஆல முண்டழ காயதோ ரானையார்
நீல மேனி நெடும்பளிங் கானையார்
கோல மாய கொழுஞ்சுட ரானையார்
கால வானைகண் டீர்கட வு[ரரே.

39-5/5600
அளித்த ஆனஞ்சு மாடிய வானையார்
வெளுத்த நீள்கொடி யேறுடை யானையார்
எளித்த வேழத்தை எள்குவித் தானையார்
களித்த வானைகண் டீர்கட வு[ரரே.

40-5/5601
விடுத்த மால்வரை விண்ணுற வானையார்
தொடுத்த மால்வரை தூயதோ ரானையார்
கடுத்த காலனைக் காய்ந்ததோ ரானையார்
கடுத்த வானைகண் டீர்கட வு[ரரே.

41-5/5602
மண்ணு ளாரை மயக்குறு மானையார்
எண்ணு ளார்பல ரேத்திடு மானையார்
விண்ணு ளார்பல ரும்மறி யானையார்
கண்ணு ளானைகண் டீர்கட வு[ரரே.

42-5/5603
சினக்குஞ் செம்பவ ளத்திர ளானையார்
மனக்கும் வல்வினை தீர்த்திடு மானையார்
அனைக்கும் அன்புடை யார்மனத் தானையார்
கனைக்கு மானைகண் டீர்கட வு[ரரே.

43-5/5604
வேத மாகிய வெஞ்சுட ரானையார்
நீதி யானில னாகிய வானையார்
ஓதி ய[ழி தெரிந்துண ரானையார்
காத லானைகண் டீர்கட வு[ரரே.

44-5/5605
நீண்ட மாலொடு நான்முகன் றானுமாய்க்
காண்டு மென்றுபுக் கார்க ளிருவரும்
மாண்ட வாரழ லாகிய வானையார்
காண்ட லானைகண் டீர்கட வு[ரரே.

45-5/5606
அடுத்து வந்த இலங்கையர் மன்னனை
எடுத்த தோள்கள் இறநெரித் தானையார்
கடுத்த காலனைக் காய்ந்ததோ ரானையார்
கடுக்கை யானைகண் டீர்கட வு[ரரே.

46-7/7503
பொடியார் மேனியனே புரிநுலொரு பாற்பொருந்த 
வடியார் மூவிலைவேல் வளர்கங்கையின் மங்கையொடுங் 
கடியார் கொன்றையனே கடவு[ர்தனுள் வீரட்டத்தெம் 
அடிகேள் என்னமுதே எனக்கார்துணை நீயலதே.

47-7/7504
பிறையா ருஞ்சடையாய் பிரமன்றலை யிற்பலிகொள் 
மறையார் வானவனே மறையின்பொரு ளானவனே 
கறையா ரும்மிடற்றாய் கடவு[ர்தனுள் வீரட்டத்தெம் 
இறைவா என்னமுதே எனக்கார்துணை நீயலதே.

48-7/7505
அன்றா லின்னிழற்கீழ் அறம்நால்வர்க் கருள்புரிந்து 
கொன்றாய் காலனுயிர் கொடுத்தாய்மறை யோனுக்குமான் 
கன்றாருங் கரவா கடவு[ர்த்திரு வீரட்டத்துள் 
என்றா தைபெருமான் எனக்கார்துணை நீயலதே.

49-7/7506
போரா ருங்கரியின் னுரிபோர்த்துப்பொன் மேனியின்மேல் 
வாரா ரும்முலையாள் ஒருபாகம் மகிழ்ந்தவனே 
காரா ரும்மிடற்றாய் கடவு[ர்தனுள் வீரட்டானத் 
தாரா என்னமுதே எனக்கார்துணை நீயலதே.

50-7/7507
மையார் கண்டத்தினாய் மதமாவுரி போர்த்தவனே 
பொய்யா தென்னுயிருள் புகுந்தாயின்னம் போந்தறியாய் 
கையார் ஆடரவா கடவு[ர்தனுள் வீரட்டத்தெம் 
ஐயா என்னமுதே எனக்கார்துணை நீயலதே.

51-7/7508
மண்ணீர் தீவெளிகால் வருபூதங்க ளாகிமற்றும் 
பெண்ணோ டாணலியாய்ப் பிறவாவுரு ஆனவனே 
கண்ணா ரும்மணியே கடவு[ர்தனுள் வீரட்டத்தெம் 
அண்ணா என்னமுதே எனக்கார்துணை நீயலதே.

52-7/7509
எரியார் புன்சடைமேல் இளநாகம் அணிந்தவனே 
நரியா ருஞ்சுடலை நகுவெண்டலை கொண்டவனே 
கரியார் ஈருரியாய் கடவு[ர்தனுள் வீரட்டத்தெம் 
அரியாய் என்னமுதே எனக்கார்துணை நீயலதே.

53-7/7510
வேறா உன்னடியேன் விளங்குங்குழைக் காதுடையாய் 
தேறேன் உன்னையல்லாற் சிவனேயென் செழுஞ்சுடரே 
காறார் வெண்மருப்பா கடவு[ர்த்திரு வீரட்டத்துள் 
ஆறார் செஞ்சடையாய் எனக்கார்துணை நீயலதே.

54-7/7511
அயனோ டன்றரியும் அடியும்முடி காண்பரிய 
பயனே எம்பரனே பரமாய பரஞ்சுடரே 
கயமா ருஞ்சடையாய் கடவு[ர்த்திரு வீரட்டத்துள் 
அயனே என்னமுதே எனக்கார்துணை நீயலதே.

55-7/7512
காரா ரும்பொழில்சூழ் கடவு[ர்த்திரு வீரட்டத்துள் 
ஏரா ரும்மிறையைத் துணையாஎழில் நாவலர்கோன் 
ஆரூ ரன்னடியான் அடித்தொண்டன் உரைத்ததமிழ் 
பாரோ ரேத்தவல்லார் பரலோகத் திருப்பாரே.
Thiruvidaivoi