376
வாளாருங் கண்ணியர் மாயையை நீக்கி மலிகரணக்
கோளாகும் வாதனை நீத்துமெய்ஞ் ஞானக் குறிகொடுநின்
தாளாகும் நீழல் அதுசார்ந்து நிற்கத் தகுந்ததிரு
நாளாகும் நாள்எந்த நாள்அறி யேன்தணி காசலனே

377
ஊன்பார்க்கும் இவ்வூடற் பொய்மையைத் தேர்தல் ஒழிந்தவமே
மான்பார்க்கும் கண்ணியர் மையலில் வீழும் மயக்கம்அற்றே
தேன்பார்க்கும் சோலைத் தணிகா சலத்துன் திருஅழகை
நான்பார்க்கும் நாள்எந்த நாள்மயில் ஏறிய நாயகனே

378
என்னே குறைநமக் கேழைநெஞ் சேமயில் ஏறிவரும்
மன்னே எனநெடு மாலும் பிரமனும் வாழ்த்திநிற்கும்
தன்னேர் தணிகைத் தடமலை வாழும்நற் றந்தைஅருள்
பொன்னேர் திருவடிப் போதுகண் டாய்நம் பூகலிடமே

379
பேதைநெஞ் சேஎன்றன் பின்போந் திடுதிஇப் பேயூலக
வாதைஅஞ் சேல்பொறி வாய்க்கலங் கேல்இறை யூம்மயங்கேல்
போதையெஞ் சேல்தணி காசலம் போய்அப் பொருப்பமர்ந்த
தாதைஅஞ் சேவடிக் கீழ்க்குடி யாகத் தயங்குவமே

திருச்சிற்றம்பலம்

 நாள் அவம்படாமை வேண்டல்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
திருச்சிற்றம்பலம்

380
குன்றமொத் திலங்கு பணைமுலை நெடுங்கண்
கோதையர் பால்விரைந் தோடிச்
சென்றஇப் பூலையேன் மனத்தினை மீட்டுன்
திருவடிக் காக்கும்நாள் உளதோ
என்தனி உயிரே என்னுடைப் பொருளே
என்உளத் திணிதெழும் இன்பே
மன்றலம் பொழில்குழி தணிகையம் பொருப்பில்
வந்தமர்ந் தருள்செயூம் மணியே